AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karthi: சிறை பட இயக்குநருடன் இணையும் கார்த்தி? – வைரலாகும் தகவல்!

Karthis Next Film Director: தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் தொடர்ந்து புது படம் உருவாகிவரும் நிலையில், இவர் சிறை பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Karthi: சிறை பட இயக்குநருடன் இணையும் கார்த்தி? – வைரலாகும் தகவல்!
கார்த்திImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 14 Jul 2026 15:19 PM IST

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் வா வாத்தியார் (Vaa vaathiyaar). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்த இப்படம், இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுக்கவில்லை. இதை இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy) இயக்க, ஸ்டூடியோஸ் க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் (Thamizh) இயக்கத்தில் மார்ஷல் (Marshal) என்ற படத்தில் நாயகனாக நடித்துவந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள சூப்பர் ஹிட் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கிய நிலையில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

மேலும் தற்போது தனது 30வது படத்தில் தெலுங்கு இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி இணைந்துள்ளார். இது இவர் நடிக்கும் முழு தெலுங்கு படமாக உருவாகிவருகிறது. இப்படத்தை அடுத்து எந்த இயக்குநருடன் கார்த்தி இணையவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பு காட்டும் தனுஷின் ஓம் படம் – வைரலாகும் தகவல்

கார்த்தியின் புது படத்தின் இயக்குநர் யார்:

கார்த்தி தனது 30வது படத்தை இயக்குநர் கல்யாண் ஷங்கருடன் இணைந்துள்ளார். இவரின் கூட்டணியில் இப்படம் உருவாக்கி நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்துவருகிறார். இதையடுத்து டாடா மற்றும் கராத்தே பாபு இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் இணைவதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: விரைவில் திருமணம் செய்கிறார் அனிருத்.. கல்யாணம் எப்போது தெரியுமா?

அதை தொடர்ந்து தற்போது அவர் சிறை பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கத்தில் புது படத்தில் இணைவதாக பேசப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது உண்மையானால் விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தியின் புதிய திரைப்படத்தின் இயக்குநர் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

கார்த்தி தற்போது தெலுங்கு மொழியில், இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு பின், மேற்காண் எந்த இயக்குநருடன் கார்த்தி இணைகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us