AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பு காட்டும் தனுஷின் ஓம் படம் – வைரலாகும் தகவல்

Actor Dhanush OM Movie Shooting Update | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் ஓம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பு காட்டும் தனுஷின் ஓம் படம் – வைரலாகும் தகவல்
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jul 2026 13:48 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் தொடர்ந்து தமிழ் மொழியில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த மூன்று படங்களும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டிலும் நடிகர் தனுஷ் நடிப்பில் குறைந்தது இரண்டு படங்களாவது திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் முதலாவதாக கர படம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி வைத்தார் நடிகர் தனுஷ். அந்தப் படத்திற்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பு காட்டும் தனுஷின் ஓம் படம்

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து பிரபல நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓம் திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்த பிறகு லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் இணைவதற்கு முன்னதாக, தனுஷ் ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ளவுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Also Read… அப்போ ஜன நாயகன் படத்தை இந்த வயதினர் மட்டும் தான் பார்க்க முடியுமா? வெளியானது சென்சார் அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பென்ஸ் படத்தில் நிறைவடைந்தது முக்கிய நடிகர்களின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்

Follow Us