AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ப்ரீ ரிலீஸ் வசூலில் கெத்து காட்டும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் – வைரலாகும் தகவல்

Vishwanath And Sons Movie Pre Release Business Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் கலெக்‌ஷன் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ப்ரீ ரிலீஸ் வசூலில் கெத்து காட்டும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் – வைரலாகும் தகவல்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jul 2026 13:00 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் ரொமாண்டிக் ட்ராமா ஃபீல் குட் படமாக உருவாகி உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். இந்தப் படத்தில் இருந்து வெளியான டீசர் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்த நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

ப்ரீ ரிலீஸ் வசூலில் கெத்து காட்டும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்:

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பிரம்மாண்டமான வணிகத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும், இப்படம் வெளியீட்டிற்கு முன்னரே இத்தகைய மிகப்பெரிய வணிகத்தை ஈட்டக் காரணமாக அமைந்துள்ளன என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… ஜெயிலர் 2 படத்துடன் மோதும் தனுஷின் ஓம் படம்.. ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஐ, நோபடி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Follow Us