D x V என்பதன் அர்த்தம் இதுதானா? வைரலாகும் தனுஷின் எக்ஸ் தள பதிவு
Dhanush DxV movie update viral on social media | தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் நாளை வெளியாக உள்ளது. அது தொடர்பாக நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு கர படம் திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்ததாக மலேசியாவில் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் அடுத்தப் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. D x V என்ற போஸ்டர் நேற்று வெளியான நிலையில் நாளை 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




D x V என்பதன் அர்த்தம் இதுதானா?
D x V என்ற போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் தனுஷின் படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக நினைத்தனர். ஆனால் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி அது வி எல்லை என்றும் நம்பரில் கூறப்படும் ஐந்து என்ற குறியீட்டை குறிக்கிறது என்றும் தனுஷ் இயக்க உள்ள 5-வது படம் தொடர்பான அப்டேட் தான் அது என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, பணிந்தவரை விட்டு வைப்பான் பகைத்தவரை நட்டு வைப்பான் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு பீரியட் ட்ராமா படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… Kayadu Lohar: நான் எப்போது STR சாருடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாலும்.. கவலையாக பேசிய கயாடு லோஹர்!
நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
பணிந்தவரை விட்டு வைப்பான்
பகைத்தவரை நட்டு வைப்பான் pic.twitter.com/kPY902r2RZ— Dhanush (@dhanushkraja) July 8, 2026
Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை இதுதான் – தயாரிப்பாளர் ஓபன் டாக்