Kayadu Lohar: நான் எப்போது STR சாருடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாலும்.. கவலையாக பேசிய கயாடு லோஹர்!
Kayadu Lohars STR49 Regret: நடிகை கயாடு லோஹர் தற்போது தமிழில் தொடர்ந்து புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். அந்த விதத்தில் இவர் சிலம்பரசனுடன் STR49 என்ற படத்தில் ஒப்பந்தமான நிலையில், அது கைவிடப்பட்டுள்ளது. தற்போது அது குறித்த தனது வருத்தத்தை நடிகை கயாடு லோஹர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கோலிவுட் சினிமாவில் தற்போது இளம் கதாநாயகியாக பல உச்ச நடிகர்களுடன் நடித்துவருபவர் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). இதை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்க, அதர்வா (Atharvaa) ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் இப்படத்தில் கயாடு லோஹர் மற்றும் பிரீத்தி முகுந்தன் (Preity Mukundhan)போன்றவர்களும் இணைந்து நடித்துள்ளனர். பீல் குட்டான காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், 2026ம் ஆனது ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், இதே நிறுவனத்தின் கீழ் சிலம்பரசனுடன் (Silambarasan) STR49 என்ற படத்தில் கயாடு லோஹர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த படம் தற்போது முழுமையாக கைவிடப்பட்டுள்ளதாம். சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் பேசிய நடிகை கயாடு லோஹர், சிலம்பரசனுடன் நடிக்கமுடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ரூ 100 கோடி வசூலை நெருங்கும் சமந்தாவின் மா இன்டி பங்காரம்.. படக்குழு வெளியிட்ட வசூல் விவரம்!
சிலம்பரசனுடன் நடிக்கமுடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்த நடிகை கயாடு லோஹர்:
அந்த நேர்காணலில் பேசிய கயாடு லோஹர், “நான் எப்போது சிலம்பரசன் சாருடன் நடிப்பதற்கு படங்களில் ஒப்பந்தமானாலும், அந்த படம் என்னை விட்டு போய்விடுகிறது. இல்லையென்றால் அந்த படமானது நடக்காமல் போகிறது. ஆகவே, நான் இறுதியாக அவருடன் ஒரு படத்தில் நடிக்கும்போது, அது உண்மையிலேயே ஒரு அற்புதமான படைப்பாக அமையும் என்று எங்கோ எழுதப்பட்டிருப்பதாக நான் நம்புகிறேன். அதை நான் பிரபஞ்சத்திடமே விட்டுவிடுகிறேன். நான் அவருடன் 2 படங்களில் பணியாற்றிருக்கவேண்டியது” என அதில் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.
நடிகை கயாடு லோஹரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
சிலம்பரசனுடன் கயாடு லோஹர் இணையவிருந்த படம் :
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பாடம் STR49. இதில் சந்தனம் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, படத்தின் ஷூட்டிங் பூஜைகளும் நடந்தது.
இதையும் படிங்க: மஞ்சணத்தி படத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் – கயாடு லோஹர்!
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனையின் காரணமாக இது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிலம்பரசன் வெற்றிமாறனுடன் அரசன் படத்தில் உடனே இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிம்பு மற்றும் கயாடு லோஹர் கூட்டணி படம் நடக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.