கருப்பு படத்தின் வெற்றி… சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா? வைரலாகும் தகவல்
Actor Suriya has hiked his remuneration | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது படங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த மே மாதம் சூர்யா நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வசூல் முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படங்களின் வசூலை விட அதிகம் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. கருப்பு படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியகா நடித்து இருந்தார். மேலும் அவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ஹிட் அடித்த பலப் படங்களின் ரெஃபரன்ஸ்களும் வைக்கப்பட்டு இருந்து அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அந்த கருப்பு படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 மற்றும் ஜி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48 ஆகியப் படங்களின் படப்பிடிப்பு பணிகளும் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




கருப்பு பட வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா?
‘கருப்பு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கான சம்பளம் அதிகரித்துள்ளது. ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளதால், சூர்யாவின் அடுத்த படத்திற்கான சம்பளம் 100 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
Also Read… DC Movie: லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ‘Hangova’ என்ற முதல் பாடல் வீடியோ வெளியீடு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
💥Karupu has become a huge success, Suriya’s salary has increased in the upcoming subjects
Karuppu film has collected 200 crores in Tamil Nadu alone, so Suriya next film salary is 100 crores 💥🔥❤️#suriya #KaruppuBlockbuster #VishwanathAndSons #suriya47 #suriya48 pic.twitter.com/RaFkmWGXVw— Rakesh (@Suriyaisam) July 7, 2026
Also Read… நானி – வெங்கி அட்லூரி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்