AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Priyamani: ஜன நாயகன் பட ரிலீஸ் இந்த மாதத்தில் இருக்கும் – அப்டேட் கொடுத்த பிரியாமணி!

Priyamani About Jana Nayagan Release: ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படம்தான் ஜன நாயகன். இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் பல பிரச்சனைகளின் காரணமாக ரிலீஸாகவில்லை. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரியாமணி ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

Priyamani: ஜன நாயகன் பட ரிலீஸ் இந்த மாதத்தில் இருக்கும் – அப்டேட் கொடுத்த பிரியாமணி!
பிரியாமணி மற்றும் விஜய்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 05 Jul 2026 10:45 AM IST

தென்னிந்திய சினிமாவில் வெளியீட்டிற்கு முன்னே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்க, முன்னாள் நடிகரும், தமிழக முதல்வருமான விஜய் (CM Vijay) நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலே வெளியாக தயாரானது. ஆனால் இப்படத்திற்கு சென்சார் கிடைக்காததால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதற்க்கு பின்னும் பல சிக்கல்களை இப்படம் சந்தித்தது. ஜன நாயகன் படத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju), பிரியாமணி (Priyamani), நரேன் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது இப்படத்திற்கு சென்சார் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. மேலும் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரியாமணி ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து அப்டேட் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் அதற்காகவே பிறந்தவர்.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!

ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த நடிகை பிரியாமணி:

அந்த பேட்டியில் பேசிய பிரியாமணியிடம், தொகுப்பாளர் ஜன நாயகன் பட ரிலீஸ் குழப்பம் குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு தெரிந்து ஜன நாயகன் படம் இந்த மாதத்தில் (ஜூலை) வெளியாகும். உறுதியாக எனக்கு தெரியவில்லை, தெரிந்தாலே நிச்சயமாக போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகும். மேலும் விஜய் சார் முதலமைச்சராக பொறுப்பெற்றிருப்பது எனக்கு மிகஉந்த மிகிழ்ச்சியாக இருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் சார் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவது மிகப்பெரிய பொறுப்பாகும் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

எல்லோரும் சொல்வது போல், இந்தப் பொறுப்பிற்காகவே அவர் பிறந்தவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் பொறுப்பில் அவர் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அவர் இதே பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் அவர் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஜன நாயகன் பட ரிலீ குறித்து பிரியாமணி பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:

ஜன நயகன் படத்தில் நடிகை பிரியாமணி ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் சர்ச்சையான பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்பட சென்சார் மாற்றத்தின் காரணமாக பிரியாமணியின் கதாபாத்திரத்தின் பெயரும் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us