ரஜினிகாந்த் சார் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவது மிகப்பெரிய பொறுப்பாகும் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
Ashwath Marimuthu said its a huge responsibility to direct Rajinikanth sir | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் சமீபத்தில் பேசிய போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவது மிகப்பெரிய பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகரக்ளிடையே இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் டிராகன். கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த ட்ராகன் படம் தமிழ் சினிமாவில் அதிக அளவில் வசூலை செய்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை அடுத்தடுத்து இரண்டு படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக மற்றியது.
இந்த நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தர்மன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில் படத்தினை கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தினை குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ரஜினி சார் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவது மிகப்பெரிய பொறுப்பு:
ரஜினிகாந்த் சார் கதாநாயகனாக நடிக்க, இவ்வளவு புகழ்பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படத்தை இயக்குவது மிகப்பெரிய பொறுப்பாகும். படப்பிடிப்பு தளத்தில்கூட, இந்தக் கூட்டணி குறித்து நினைக்கும்போதெல்லாம் எனக்குள் ஒருவித நெகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படுவதாக ரஜினி சாரிடம் கூறினேன். அவருடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாகவும், மிகுந்த மகிழ்ச்சி தருவதாகவும் இருந்தது. அவருக்கு வயதே ஆகவில்லை என்று நான் உண்மையாகவே உணர்கிறேன்; அவர் மிகுந்த ஆற்றலுடன் திகழ்கிறார், ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்கிறார், மேலும் தனது உற்சாகமான சுபாவத்தால் படப்பிடிப்பு தளத்தையே கலகலப்பாக வைத்திருக்கிறார்.
டிராகன் படத்தில் பணியாற்றிய அதே குழுதான் இப்பொழுதும் இந்தப் படத்திலும் பணியாற்றுகிறது. இதில் தர்மனின் பணி, தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பானதாக அமையும். இப்படம் முழுக்க முழுக்கத் தலைவரின் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தலைவரின் தனித்துவமான பாணி, கம்பீரம் மற்றும் ரசிகர்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கும் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இது நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டமாக அமையப்போகிறது என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
Also Read… Jailer 2: ஒன் நேம்.. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட தீம் பாடலை வெளியிட்ட அனிருத்!
இணையத்தில் வைரலாகும் அஸ்வத் மாரிமுத்து பேச்சு:
#AshwathMarimuthu about #Dharman
– It is a huge responsibility to direct a film under such a prestigious production with #Rajinikanth Sir as the hero. Even on the shooting spot, I told Rajini Sir that whenever I think about this combination, I feel overwhelmed.
– I had a… pic.twitter.com/zCvbVcoLZG
— Movie Tamil (@_MovieTamil) July 3, 2026
Also Read… பிரித்விராஜ் சுகுமாரின் ஐ, நோபடி படத்திலிருந்து வெளியானது ராவு தாண்டி பாடலின் லிரிக்கள் வீடியோ