AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அங்கீகாரம் படக்குழுவை திரையரங்கில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

Natarajan Praises K.J. Rajesh Angikaaram Movie: சேலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், விளையாட்டு துறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள அங்கீகாரம் திரைப்படத்தை சேலம் டிஎன்சி ராக்ஸ் திரையரங்கில் இன்று படத்தின் கதாநாயகன் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் மற்றும் இயக்குநர் தென்பதியான் ஆகியோருடன் பார்வையிட்டார்.

அங்கீகாரம் படக்குழுவை திரையரங்கில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்!
ங்கீகாரம் படக்குழுவை வாழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்Image Source: X
Sathis S
Sathis S | Published: 03 Jul 2026 16:20 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியில் வெளியாகிய திரைப்படம்தான் அங்கீகாரம் (Angikaaram) . இப்படத்தில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ஜே.ராஜேஷ் (KJ Rajesh) நாயகனாக நடித்திருந்தார். இதை இயக்குநர் தென்பதியான் (Thenpathiyan) இயக்க, உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அதிரடி ஸ்போட்ஸ் டிராமா கதையில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் படங்களை பார்த்தவர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தாலும், பெருமளவு பிரபலமாகவில்லை என கூறலாம்.

அந்த வகையில் இப்படத்தை சேலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் (Indian cricketer Natarajan) இப்படத்தை திரையரங்கில் சென்று பார்வையிட்டுள்ளார். சேலத்தில் உள்ள தனியார் திரையரங்கில், இன்று (03/07/2026) நடிகர் கே.ஜே.ராஜேஷ் மற்றும் இயக்குநர் தென்பதியான் உடன் இப்படைத்த பார்த்து பாராட்டியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் நடராஜன்.

இதையும் படிங்க: பிளாஸ்ட் பட ஆக்ஷன் காட்சியில் நடிக்கும்போது அந்த நடிகரை இன்ஸ்பிரேஷனாக நினைத்தேன் – பிரீத்தி முகுந்தன்!

செய்தியாளர்களிடம் அங்கீகாரம் படம் குறித்து பேசிய நடிகர் கே.ஜே.ராஜேஷ்:

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கதாநாயகன் ராஜேஷ் மற்றும் இயக்குநர் தென்பதியான், “விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், புறக்கணிப்புகள் மற்றும் துறையில் உள்ள குறைபாடுகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றனர். மேலும், திரைப்படத்தை கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் இணைந்து பார்த்ததாகவும், படம் சிறப்பாக உருவாகியுள்ளதாக அவர் பாராட்டியதாகவும் தெரிவித்தனர். இந்தப் படத்தில், விளையாட்டு துறையில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளுக்கு எதிராக கதாநாயகன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் கதைக்களம் இடம்பெற்றுள்ளதாகவும், அதன் முடிவே படத்தின் மையக்கரு என்றும் கூறினர்.

இந்தப் படத்தை தமிழ்நாடு முதலமைச்சருக்கும் திரையிட்டுக் காட்ட திட்டமிட்டுள்ளதாகவும், குறை கூறுவதற்காக அல்ல, விளையாட்டு வீரர்களின் நிலையை சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதே படத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தனர். மேலும், அறம் திரைப்படம் ஆரம்ப நாட்களில் பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும் பின்னர் வெற்றிப் பெற்றது போல, அங்கீகாரம் திரைப்படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர்கள் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரருடன் அங்கீகாரம் படத்தை கே.ஜே.ராஜேஷ் பார்வையிட்டது தொடர்பாக வைரலாகும் பதிவு:

இதையும் படிங்க: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் நிரந்தர கௌரவத் தலைவர் மறைந்த கே பாக்கியராஜ் நியமனம் – பார்த்திபன் வெளியிட்ட பதிவு!

Follow Us