AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

படமே ரிலீஸாகல.. ஆனால் இயக்குநருக்கு விலையுயர்ந்த பரிசை கொடுத்த விஷ்ணு விஷால்!

Vishnu Vishal Gifted A Car To Director Chella Ayyavu: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இதை 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே இயக்குநர் செல்லா அய்யாவுவுக்கு விலையுயர்ந்த காரை விஷ்ணு விஷால் பரிசாக வழங்கியுள்ளார்.

படமே ரிலீஸாகல.. ஆனால் இயக்குநருக்கு விலையுயர்ந்த பரிசை கொடுத்த விஷ்ணு விஷால்!
செல்ல அய்யாவுக்கு கார் பரிசளித்த விஷ்ணு விஷால்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 02 Jul 2026 16:24 PM IST

இந்த 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு (Chella Ayyavu) இயக்க, நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) ஹீரோவாக நடித்துள்ளார். இந்த கூட்டணியில் கடந்த 2022ம் ஆண்டில் கட்டா குஸ்தி 1 படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது கட்டா குஸ்தி 2 படமானது தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் வீட்டுவேலை செய்யும் கணவனாகவும், ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகியுள்ள இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதன் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது. சமீபத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியோடு விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவுவுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார். அதுவும் இன்னும் கட்டா குஸ்தி 2 படமானது வெளியாகுவதற்கு முன்பே வாங்கி கொடுத்திருக்கும் நிலையில், இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கியது துருவ் விக்ரமின் புதுப் படம் – வைரலாகும் போட்டோஸ்

இயக்குநருக்கு கார் பரிசாக வழங்கியது குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு:

அந்த ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால், “நான் முன்பே இயக்குநர் செல்லாவுக்கு ஒரு காரை பரிசாக வழங்கவேண்டும் என நினைத்தேன். அப்போது அவரிடம், உங்களுக்கு எந்த மாதிரியான கார் பிடிக்கும் என் ஆகிட்டேன். அதற்கு அவர், குடும்பமாக செல்லும் கார் பிடிக்கும் என்றால். நம்மளை பொறுத்தவரை குடும்பமாக செல்லும் கார் என்றாலே “இனோவா கார்தான்” நான் அதையே அவருக்கு பரிசாக கொடுக்க விரும்புகிறேன்” என அதில் அவர் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருக்கும் சிம்பு – வைரலாகும் வீடியோ

நினைத்தபடியே கட்டா குஸ்தி 2 வெற்றிபெறுமா:

கட்டா குஸ்தி 2 படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் வெளியாகிறது. இந்த படமானது பேமிலி மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவதும் நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிமாக உள்ளது. அதனால் இப்படம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us