மமிதா பைஜூவை தொடர்ந்து தென்னிந்திய சினிமவில் கொடிகட்டி பறக்கும் ரியா ஷிபு
Vijay Sethupathi and Riya Shibhu are acting together | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ரியா ஷிபு தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி வருவது தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக அளவில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது. அதில் பலர் அவ்வபோது படங்களில் நடித்து வந்தாலும் சிலர் அதிக அளவில் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போதைய நிலவரப்படி நடிகை மமிதா பைஜூ முன்னணி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் மலையாள மொழியில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இருந்தாலும் தற்போது தொடர்ந்து தமிழ் மொழியில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை இரண்டு படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி உள்ள நிலையில் அடுத்ததாக 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது நடிகை ரியா ஷிபு-வும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி சினிமாவில் தயாரிப்பாளராக தனது பணியைத் தொடங்கிய நடிகை ரியா ஷிபு பிறகு நடிகையாக நடிக்கத் தொடங்கினார். மலையாள சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான சர்வம் மாயா படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார் நடிகை ரியா ஷிபு.




விக்ரமை தொடர்ந்து விஜய் சேதுபதி உடன் ஜோடி சேரும் நடிகை ரியா ஷிபு?
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரியா ஷிபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். ஜூலை 7-ஆம் தேதி மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி இணையவிருப்பதால், அதற்கு முன்னதாக ஒரு வார காலத்திற்கு இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நுணுக்கமான உணர்வுப் பரிமாற்றங்களையும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான பிணைப்பையும் சிறப்பாகக் கையாளும் திறன் கொண்டவர் என்பதால், கிருத்திகாவின் இயக்கத்தில் உணர்வுபூர்வமான மற்றும் சுவாரஸ்யமான ஒரு படைப்பை நாம் எதிர்பார்க்கலாம். பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுடன் ‘ரெட் ஜெயண்ட் ஸ்டுடியோஸ்’ (Red Giant Studios) நிறுவனம் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.
Also Read… Gatta Kusthi 2: ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆர்மி அசெம்பிள்.. கட்டா குஸ்தி 2 பட 3வது பாடல் வெளியீடு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
BUZZ – #VijaySethupathi x #RiyaShibhu, the sensational Delelu ♥️, are acting together in #KiruthigaUdhaynidhi’s directorial. Shooting is currently underway and will continue for one week before #VJS commences #ManiRatnam’s film on July 7. With the director known for exploring… pic.twitter.com/IInZhOhbMs
— Movies Singapore (@MoviesSingapore) July 1, 2026
Also Read… நோ சொன்ன ரஜினிகாந்த்… விக்ரமை நாடும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி