இயக்குநர் சுதா கொங்கராவால் அதர்வாவின் இதயம் முரளி படத்திற்கு வந்த சிக்கல் – என்ன நடந்தது தெரியுமா?
Sudha Kongara filed a case against dawn pictures production company | தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள டான் பிக்சர்ஸ் மீது இயக்குநர் சுதா கொங்கரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து தமிழ், இந்தி மொழிகளிலும் படங்களை இயக்கி வருகிறார். தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் படங்களை இயக்கி வரும் இயக்குநர் சுதா கொங்கரா அதிக அளவில் தமிழ் மொழியில் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களில் தமிழ் சினிமாவில் இறுதிச் சுற்று, சூரரைப் போற்று மற்றும் பராசக்தி படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து ரவி மோகன் வில்லனாக நடித்த பராசக்தி படம் தான் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




அதர்வாவின் இதயம் முரளி படத்திற்கு வந்த சிக்கல்:
இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன்படி பராசக்தி படத்திற்காகத் தனக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 8.39 கோடி ஊதியம் தொடர்பாக, இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜூலை 8-ஆம் தேதி வரை இப்படத்தின் செயற்கைக்கோள் (satellite) வெளியீட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது ஊதியம் முழுமையாக வழங்கப்படும் வரை, ஜூலை 10-ஆம் தேதி வெளியாகவுள்ள இதயம் முரள’ படத்தின் வெளியீட்டையும் நிறுத்தி வைக்குமாறு அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த இதயம் முரளி படத்தில் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து உள்ள நிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை எழுதி இயக்கிஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… Kayadu Lohar: நான் முதல் முதலில் சென்னைக்கு வந்த காரணமே அதுதான் – உண்மையை உடைத்த கயாடு லோஹர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு:
Director 🎥 #SudhaKongara has moved the Madras High Court over her unpaid salary of ₹8.39 crore for #Parasakthi. The satellite release of the film has been restrained until July 8. Her plea also seeks to restrain the release of #IdhayamMurali on July 10, until her salary is… pic.twitter.com/ncmNLan03c
— Movies Singapore (@MoviesSingapore) June 30, 2026
Also Read… கதிரும் நானும் முன்பே ஒரு படத்தில் நடித்து இருந்தோம் – நடிகை திவ்ய பாரதி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்