AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Varanasi: வாரணாசி படத்தில் அதையெல்லாம் அனுபவிப்பீர்கள்.. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சொன்ன விஷயம்!

Mahesh Babus Varanasi Movie Plot: ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவரும் பிரம்மாண்டமான திரைப்படம் வாரணாசி. இதை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்க, மகேஷ் பாபு இணைந்து நடித்துவருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராஜமௌலி, வாரணாசி படம் குறித்து அப்டேட்டை கூறியுள்ளார்.

Varanasi: வாரணாசி படத்தில் அதையெல்லாம் அனுபவிப்பீர்கள்.. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சொன்ன விஷயம்!
வாரணாசி பற்றி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Jun 2026 14:01 PM IST

டோலிவுட் சினிமாவில் உச்ச இயக்குநராக இருந்துவருபவர்தான் எஸ்.எஸ்.ராஜமௌலி (SS Rajamouli). இவரின் இயக்கத்தில் இதுவரை பல படங்கள் வெளியாகி இந்திய அளவில் மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருக்கிறது. இவரின் இயக்கத்தில் இறுதியாக ஆர்.ஆர்.ஆர் (RRR) என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் இவர் இயக்கிவரும் ஊதிய திரைப்படம்தான் வாரணாசி (Varanasi). இதில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்குநராக பணியாற்ற, தெலுங்கு நாயகன் மகேஷ் பாபு (Mahesh Babu) உச்ச நடிகராக நடித்துவருகிறார். இதில் அவருடன் நடிகை பிரியங்கா சோப்ராவும் (Priyanka Chopra) நடித்துவருகிறார்.

இப்படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகிவரும் நிலையில், படத்தின் மீது வரவேற்பு அதிகமாக இருந்துவருகிறது. சமீபத்தில் இப்படத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.எஸ்.ராஜமௌலி, இப்படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூர்யா 47 படத்தில் ஷூட்டிங் நிறைவடைந்ததா? – இணையத்தில் வைரலாகும் பதிவு!

வாரணாசி திரைப்படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பேசிய எஸ்.எஸ்.ராஜமௌலி:

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசுகையில், “வாரணாசி படத்தில் நீங்கள் ஆப்பிரிக்காவின் காடுகள் பற்றி அனுபவிக்கலாம், அண்டார்டிகா குளிரையும் பணியையும், ராமாயணத்தின் கடவுள்களையும், இயற்கை பேராழிவுகளையும், கற்பனை கூறுகையும் இப்படத்தில் அனுபவிக்கப்போகிறீர்கள். அதுதான் அனுபவமாக இருக்கும்.

இதையும் படிங்க: அனிஷ்மாவின் ஸ்பெஷல் டே.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மொத ராத்திரி படக்குழு!

ஆனால் இவை அனைத்தையும் மையமாக கொண்டு, ஒரு தந்தை மாற்றும் மகனுக்கும் இடையேயான எமோஷனலான படமாக இது இருக்கும். இப்படமானது அனைத்தையும் இணைந்தது உருவாக்கப்பட்டிருக்கிறது” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

வாரணாசி படம் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்தது குறித்து வைரலாகும் பதிவு:

இந்த வாரணாசி படத்தின் ஷூட்டிங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துவருகிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆனது அக்டோபர் மாதத்தில் முழுவதுமாக நிறைவடைகிறதாம்.

மேலும் இப்படத்தை வரும் 2027ம் ஆண்டு மார்ச் 7ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டம். விரைவில் இப்படத்தின் தொடர்பான அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது கிட்டத்தட்ட ரூ4000 கோடி பட்ஜெட்டில் தயாராகிவரும் நிலையில், ஹாலிவுட் பட ரேஞ்சில் இதுவும் இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us