Suriya: சூர்யா 47 படத்தில் ஷூட்டிங் நிறைவடைந்ததா? – இணையத்தில் வைரலாகும் பதிவு!
Suriya47 Shooting Update: மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா இணைந்து நடித்துவரும் 47வது படம்தான் சூர்யா47. இப்படத்தின் ஷூட்டிங் கேரளா மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் அனைவராலும் புகழப்பட்டவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா (Suriya). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஒன்றா மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் கருப்பு (Karuppu). கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்திருந்தது. இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு சூர்யா இணைந்திருக்கும் புது திரைப்படம்தான் சூர்யா47 (Suriya47). இப்படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கிவருகிறார். இவர் ஃபஹத் பாசிலின் (Fahadh Faasil) ஆவேஷம் படத்தை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் சூர்யாவை வைத்து புது படம் இயக்கிவரும் நிலையில், அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறதாம். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் நிறுவடைந்ததாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பாக்யராஜோட பெரிய மைனஸ்.. அந்த படத்தில் அவர் சொன்னதுதான் நான் பண்ணேன் – ரஜினி பகிர்ந்த மறக்கமுடியாத விஷயம்!
நிஜமாகவே சூர்யா47 பட ஷூட்டிங் முடிவடைந்ததா:
இப்படத்தில் சூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நஸ்ரியா நசீம் நாயகியாக நடித்துவருகிறார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்துள்ளது. இதை ஜித்து மாதவன் இயக்க, சூர்யாவின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க சென்னை மற்றும் கேரளா பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: நடிகர்களை விட நடிகைகளுக்கே சவால்கள் அதிகம் – மனம்திறந்த காஜல் அகர்வால்!
இந்நிலையில் தற்போது இதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதுவரை இப்படத்தில் 90 சதவீத ஷூட்டிங் மட்டுமே நிறைவடைந்துள்ளதாம். மேலும் இன்னும் சில நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சூர்யா47 படத்தின் ஷூட்டிங் நிறைவு தொடர்பாக வைரலாகும் எக்ஸ் பதிவு:
#Suriya47 Schedule Wrap 🎬
– The Entire Shoot of the Film going to Wrap very Soon, The Film is all set to release on PONGAL 2027 🔥#Suriya | #VishwanathAndSons pic.twitter.com/JTd5iN7C5S
— Movie Verse (@_MovieVerse) June 28, 2026
இப்படத்தின் டைட்டில் தற்காலிகமாக சூர்யா47 என அழைக்கப்பட்டுவரும் நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில், சூர்யாவின் பிறந்தநாளில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு படக்குழு “சரவெடி” என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.