ஓம் படத்துடன் மோதுகிறதா ரஜினியின் ஜெயிலர் 2?.. தனுஷ் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
OM vs Jailer 2: தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமியின் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் படம்தான் ஓம். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகிறது. தற்போது இதே தேதியில் ரஜினியின் ஜெயிலர் 2 படம் ரிலீசாகுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டமல்லாமல், இயக்குநர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருகிறார். அந்த வகையில், இவர் தற்போது அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasami) இயக்கத்தில், ஓம் (OM Movie) என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி (Sai Pallavi), ஸ்ரீலீலா (Sreeleela), மம்முட்டி (Mammooty) உள்ளிட்ட பல்வேறு உச்ச பிரபலங்களும் இணைந்து நடித்துவருகிறார். இப்படமானது ஆரம்பத்தில் D55 என அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இப்படத்திற்கு ஓம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் செம்மரம் கடத்தல்கள் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்புடன் இப்படத்தின் ரிலீஸ் தேதி தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் இப்படம் வெளியாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்துடன் ஜெயிலர் 2 படம் மோதுவதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது.




இதையும் படிங்க: விஷ்ணு விஷால் – அருண்ராஜ் காமராஜின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா?
ஓம் படத்துடன் மோதும் ஜெயிலர் 2 – தனுஷின் முடிவு என்ன:
ஆரம்பத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 படமானது 2026ம் ஆண்டி தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், தற்போது அதை ஆயுத பூஜை விடுமுறைகளில் வெளியிடலாம் என திட்டமிட்டுவருகிறதாம். அந்த வகையில், தனுஷின் ஓம் படமும் ஆயுத பூஜா விடுமுறையில் வெளியாகவுள்ளதாம்.
இதையும் படிங்க: ஐயா கருப்பனே வாருமையா.. பாடகர் மகாலிங்கத்திற்கு பல லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!
தற்போது தனுஷிடம் ஜெயிலர் 2 படக்குழு பேசிவருகின்றனர். இதனால தனுஷ் ஓம் படத்தின் ரிலீஸ் தேதியை அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இது தொடர்பான தகவல்கள் வட்டாரங்களில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
Release data shuffle for #Jailer2 & #OM🔁
As Per Valaipechu,#Jailer2 which was initially planned as Diwali release has now shifted to Pooja Holidays release !!
Jailer2 team communicated it to #Dhanysh & he is in discussion to shift his #OM for Diwali as Superstar #Rajinikanth… pic.twitter.com/sl8CBRxCwU
— AmuthaBharathi (@CinemaWithAB) June 26, 2026
ஓம் படமானது ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில் சாய் பல்லவி போலீஸ் வேடத்தில் நடித்துவரும் நிலையில், மம்முட்டி நெகடிவ் வேடத்தில் நடித்துவருகிறாராம். இப்படத்தின் பாடல்களுக்கு சாய் அபயங்கர் இசையமைக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் பாடல் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.