Mari Selvaraj: மஞ்சணத்தி படத்தில் எங்க அம்மா இருப்பாங்க.. இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்ந்த விஷயம்!
Mari Selvarajs Female-Centric Storyline: தனது வித்தியாசமான திரைக்கதைகள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் தற்போது மஞ்சணத்தி என்ற புதிய திரைப்படமானது உருவாக காத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், மஞ்சணத்தி படம் குறித்து சுவாரஸ்ய அப்டேட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டில் வெளியான பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal) என்ற திரைப்படத்தின் மூலம், கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்தவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவருக்கு இப்படமானது எதிர்ப்பாராத வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் சூப்பர் ஹிட்டிற்கு பின் தனுஷை (Dhanush) வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது, தொடர்ந்து மாமன்னன், வாழை மற்றும் பைசன் போன்ற படங்களை இயக்கி வெற்றி இயக்குநராக மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படங்களின் வரிசையாக தனது இயக்கத்தில், 6-வது உருவாகிவரும் புது படம்தான் மஞ்சணத்தி (Manjanathi).
இப்படமானது பெண்ணியம் சார்ந்த கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இதில் பிரியங்கா மோகன் (Priyanka Mohan) மற்றும் கயாடு லோஹர் (Kayadu Lohar) போன்ற நடிகைகள் இணைந்து நடிக்கிறார்கள். அந்த வகையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், மஞ்சணத்தி படம் குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ஒரு ராஜ்யம் தயாராகி வருகிறது… அரசன் படத்தின் பெரிய ஷெடியூலை முடித்த படக்குழு
மஞ்சணத்தி திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய விஷயம்:
அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “மஞ்சணத்தி படத்தில் எனது அம்மா இருப்பாங்க” என அவர் கூறியிருக்கிறார். இவர் இதுவரை இயக்கியிருந்த பரியேறும் பெருமாள், மாமன்னன், பைசன் போன்ற திரைப்படங்களில் தனது தந்தையை நினைவுபடுத்தும் வகையில், ஹீரோக்களின் அப்பாவின் கதாபாத்திரங்களை மாரி செல்வராஜ் சித்தரித்திருந்தார். அதுபோல, மஞ்சணத்தி படத்தில் தனது தாயின் கதாபாத்திரத்தை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த தகவல் அவரின் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
மஞ்சணத்தி படம் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல் குறித்த வீடியோ பதிவு:
Dir #MariSelvaraj:
– The father characters in Pariyerum Perumal, Karnan, and Maamannan all remind me of my father.
– Among them, I feel the deepest connection with the father character in Pariyerum Perumal.#D56pic.twitter.com/Si0Mt9wh45— Movie Tamil (@_MovieTamil) June 26, 2026
மாரி செல்வராஜ் தொடர்ந்து ஆண்களை மையமாக கொண்ட திரைப்படங்களை இயக்கிவருகிறார். இந்நிலையில் இதற்கு மாற்றாக இவர் இயக்கிவரும் புதிய திரைப்படம்தான் மஞ்சணத்தி. இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் போன்ற பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகை? வைரலாகும் தகவல்
இப்படமானது பெண்ணியம் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவரும் நிலையில், இதில் இசைஞானி இளையராஜா இசையமைத்துவருகிறார். மேலும் இப்படமானது 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.