ஒரு ராஜ்யம் தயாராகி வருகிறது… அரசன் படத்தின் பெரிய ஷெடியூலை முடித்த படக்குழு
Silambarasans Arasan movie shooting update | தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக உள்ளார் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் அரசன் படத்தின் முக்கிய ஷெடியூலை படக்குழு முடித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தில் டைட்டில் அறிமுக வீடியோ வெளியான போதே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னதாக வட சென்னை பகுதிகளை மையமாக வைத்து வெளியான படங்களைப் போல இல்லாமல் இந்தப் படம் வித்யாசமான கதையம்சத்தை கொண்டு இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலகி வருகின்றது. தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
அரசன் படத்தின் பெரிய ஷெடியூலை முடித்த படக்குழு:
இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் தனுஷின் வட சென்னை படத்தில் நடித்த நடிகர்கள் இந்தப் படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நேற்று நள்ளிரவு படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது. அதில் பல இரவுகளாக தூங்காமல் படப்பிடிப்பு நடந்தது. அந்த மிகப்பெரிய ஷெடியூலை முடித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read… தமிழ் நாட்டில் மட்டும் கருப்பு படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்
அரசன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Arasan BIG SCHEDULE WRAP 🔥
Blood, sweat, sleepless nights… all for something truly special. The kingdom is getting ready! 👑@SilambarasanTR_ #VetriMaaran @VijaySethuOffl @thondankani @anirudhofficial @theVcreations #SilambarasanTR @iYogiBabu @VelrajR @RIAZtheboss… pic.twitter.com/qj9xQGY8Fr
— ARASAN Film (@Arasanfilm_) June 26, 2026
Also Read… லால் சலாம் படத்தில் நடிக்க இதுதான் காரணம் – விஷ்ணு விஷால்



