AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சத்யவான் சாவித்திரி படத்திலிருந்து ரிப்பிப்பி பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியானது

Rippipee Lyrical Video Song Out Now | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள சத்யவான் சாவித்திரி என்ற படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி உள்ளது.

சத்யவான் சாவித்திரி படத்திலிருந்து ரிப்பிப்பி பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியானது
சத்யவான் சாவித்திரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jun 2026 17:42 PM IST

மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகின்றார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில ஆண்டுகளாக நாயகியை மையமாக வைத்து வெளியாகும் படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரிவால்வர் ரீட்டா. டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது.

அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவேடி, தோட்டம், ரவுடி ஜனார்த்தன, சத்யவன் சாவித்திரி, ரஃப்தார் என தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள சத்யவான் சாவித்திரி படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

வெளியானது ரிப்பிப்பி பாடலின் லிரிக்கள் வீடியோ:

இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் எழுதி இயக்கி உள்ள இந்த சத்யவான் சாவித்திரி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தில் இருந்து ரிப்பிப்பி பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Suriya: அட அட அப்போ தீபாவளிதான்.. சூர்யா47 படத்தின் டைட்டில் இதுவா? – வைரலாகும் தகவல்!

சத்யவான் சாவித்திரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மலையால சினிமாவில் இந்த ட்ரீடம் இன்வெஸ்டிகேஷன் த்ரிலர் படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

Follow Us