Sardar 2: அப்போ தீபாவளிக்கு இல்லையா? கார்த்தியின் சர்தார் 2 பட ரிலீஸ் எப்போது தெரியுமா?
Sardar 2 Movie Release Update: கார்த்தியின் நடிப்பில் கைதி 2 திரைப்படத்தை போலவே, ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படம்தான் சர்தார் 2. இப்படமானது இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் கார்த்தி (Karthi). இவர் தமிழ் சினிமாவை போலவே இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்கள் அதிகம். இவர் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. இதை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்க, கார்த்தி மற்றும் க்ரித்தி ஷெட்டி இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு பின் கார்த்தியின் நடிப்பில், 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் படம் சர்தார் 2 (Sardar 2). கார்த்திக்கு கைதி 2 (Kaithi 2) படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மத்தியில், அதிகம் எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ, அதுபோலவே சர்தார் 2 படம் எப்போது வெளியாகும் என அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இதை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்கியுள்ள நிலையில், மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகியுள்ளது.
இதில் கார்த்தி ரெட்டை வேடத்தில் நடிக்க, அவருடன் முக்கியமான வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah) நடித்துள்ளார். இதன் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி சிறப்பாக வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வரிசையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பது பற்றிய பதிவு ஒன்று வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கருப்பு படத்தின் VFX சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசிய ஆர்.ஜே. பாலாஜி
கார்த்தியின் சர்தார் 2 பட ரிலீஸ் எப்போது:
கார்த்தியின் சர்தார் 2 படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ராஜீஷா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார். குறிப்பாக இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மெயின் வில்லனாக நடித்துள்ளாராம். இப்படமானது கடந்த 2021ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றி… சமந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய சிரஞ்சீவி!
அந்த வகையில், இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். இப்படம் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அதற்கு முன்னே கார்த்தியின் சர்தார் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றனர்.
கார்த்தியின் சர்தார் 2 பட ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
#Sardar2 is planning for a September 11, 2026 theatrical release. OTT rights are in the final stages of negotiations, while the satellite rights have been sold to Sony Vizha, which is set to be newly launched. They are also said to have acquired #Kavin’s next movie with the… pic.twitter.com/mR0X5lfpfD
— Movies Singapore (@MoviesSingapore) June 23, 2026
கார்த்தி சர்தார் 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தற்போது மார்ஷல் பட ஷூட்டிங்கில் இருந்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இதை வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூப்படுகிறது. மேலும் தெலுங்கு இயக்குநர் கல்யாண ஷங்கர் இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடிக்கிறார். இப்படமானது வரும் 2027ம் ஆண்டில் வெளியாகவுள்ளது.