AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ram In Leela: ரியோவின் ராம் இன் லீலா படம்.. முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Ram In Leela Movie First Single Release: தமிழில் சின்னத்திரை மூலமாக திரைத்துறையில் நுழைந்தவர்களில் ஒருவர் ரியோ ராஜ். இவரின் நடிப்பில் ராம் இன் லீலா என்ற புதிய ரோமெண்டிக் காதல் திரைப்படமானது உருவாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Ram In Leela: ரியோவின் ராம் இன் லீலா படம்.. முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?
ராம் இன் லீலா திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Jun 2026 15:01 PM IST

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியின் (Vijay TV) மூலமாக சீரியல் நடிகராக மக்களிடையே பிரபலமானவர் ரியோ ராஜ் (Rio Raj). இவர் தமிழில் சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலிற்கு பின் நேரடியாக சினிமாவில் நுழைந்தார் இவர். மேலும் அவ்வப்போது பிரபல திரைப்படங்களில் ரிலீஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவருகிறார். இவர் நடிகராக இதுவரை கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அதிலும் அவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆண் பாவம் பொல்லாதது (Aan Paavam Pollathathu). இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக இவர் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் ராம் இன் லீலா (Ram In Leela).

இப்படத்தை அறிமுக இயக்குநர்ராமச்சந்திரன் கண்ணன் (Ramachandran Kannan) இயக்கிவரும் நிலையில், ரியோ ராஜ் நாயகனாக நடித்துவருகிறார். மேலும் இப்படத்தை ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு தயாரிக்க, இசையமைப்பாளர் அங்கித் மேனன் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில், இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை வந்த பிரபல பாலிவுட் நடிகர்… ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நாயகன் கேமியோ கன்ஃபார்மா?

ரியோவின் ராம் இன் லீலா பட முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்:

இந்த படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை வர்த்திகா என்பவர் நடித்துவருகிறார். இப்படமானது அதிரடி காதல் மற்றும் ரோமெண்டிக் கதைக்களத்தில் தயாராகிவருகிறது. சிறப்பான கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இப்படத்தின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: கருப்பு படத்தின் VFX சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசிய ஆர்.ஜே. பாலாஜி

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கிய நிலையில், கடந்த 2026ம் ஆனது மார்ச் மாதத்தில் முழுமையாக நிறைவடைந்தது. அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடல் வரும் 2026ம் ஆண்ட ஜூன் 25ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ராம் இன் லீலா திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு:

இப்படத்திற்கு பிறகு ரியோ ராஜ் மேடி (Maddy) என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சானியா அய்யப்பன் நடித்துவருகிறார். இதை இயக்குநர் கார்த்திகேயன் பிகே இயக்கிவரும் நிலையில், பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இப்படமானது 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரியோ ராஜ் தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ள நிலையில், அதில் பிரவுன் மணி என்ற புது படத்தை உருவாக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us