AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் அப்பா… ஓடிடியில் வெளியாகி உள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் விமர்சனம் இதோ!

Drishyam 3 Movie OTT Review Here | மலையாள சினிமாவில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த த்ரிஷ்யம் 3 படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. அதன் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

மகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் அப்பா… ஓடிடியில் வெளியாகி உள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் விமர்சனம் இதோ!
த்ரிஷ்யம் 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2026 22:05 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் மலையாள சினிமாவில் வெளியாகி வரும் நிலையில் கடந்த 21-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் த்ரிஷம் 3 படம். இயக்குநர் ஜித்து ஜோசஃப் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே விமர்ச்ன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாகமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரம்பாவூர் தயாரித்து இருந்தார். இந்த நிலையில் த்ரிஷ்யம் 3 படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

த்ரிஷ்யம் 3 படத்தின் கதை என்ன?

தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த ஐஜி கீதா பிரபாகரின் ஒரே மகன் வருணை கொலை செய்துவிடுகிறார் ஜார்ஜ் குட்டியின் மூத்த மகள் அஞ்சு. இந்த கொலையை முதல் பாகத்தில் மறைக்கிறார் ஜார்ஜ் குட்டி. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் அந்த கொலை காரணமாக அஞ்சு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஐஜி கீதாவின் முயற்சியை முறியடிக்கிறார் ஜார்ஜ் குட்டி. இரண்டாம் பாகத்தில் படத்தை தயாரிக்கும் திரையரங்கு உரிமையாளராக இருக்கிறார் ஜார்ஜ் குட்டி.

Also Read… Samantha: விரைவில் ரூ 50 கோடி.. சமந்தாவின் எங்கள் தங்கம் பட 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இப்படி இருக்கும் சூழலில் ஜார்ஜ் குட்டி மூன்றாம் பாகத்தில் படத்தை வெளியிட்டு ஒரு தயாரிப்பாளராக வலம் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் வருணின் கொலை வழக்கை தொடர்ந்து விசாரிக்கும் அவரது தந்தை பிரபாகர் ஜார்ஜ் குட்டியின் மூத்த மகள் அஞ்சுவிற்கு திருமணம் நடைபெறாமல் இருக்க பல சதிகளை செய்து வருகிறார். இந்த சதிகளை எல்லாம் முறியடித்து ஜார்ஜ் குட்டி தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தாரா? மேலும் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்தாரா என்பதே இந்தப் படத்தின் கதை. படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… இதயம் முரளி பட டப்பிங் பணியை நிறைவு செய்த ஃபஹத் ஃபாசில் – படக்குழு வெளிட்ட வீடியோ!

Follow Us