தனுஷ் – மாரி செல்வராஜ் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
Dhanush and Mari Selvaraj movie update | தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் இணைய உள்ள படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக கர படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ஓம். இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் அப்டேட்கள் வைரலாகி வருவது போல அடுத்தடுத்து அவர் நடிக்க உள்ள படங்களின் அப்டேட்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதன்படி இந்த ஓம் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து உடன் கூட்டணி வைக்க உள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் நடிகர் தனுஷ் கூட்டணி வைக்க உள்ளார். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தனுஷ் – மாரி செல்வராஜ் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்:
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணையும் திரைப்படத்தின் பணிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருவதாகத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 2026 செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது; இது மிகவும் தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான திரைப்படமாக அமையும். மாரி செல்வராஜ் உடனான இப்படம் நிறைவடைந்த பிறகு, வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் தனுஷ் அவர்களுடன் இணைந்து வட சென்னை 2 திரைப்படத்தைத் தொடங்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அந்த உலகமும் கதையும் என்னைக் வெகுவாகக் கவர்ந்தன – சகுந்தலம் படம் குறித்து சமந்தா பேச்சு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Producer IshariGanesh Recent:
“#Dhanush – #MariSelvaraj film is well on track. We will be starting the shooting from September 2026🎬. It’ll be very unique & Big scale film🔥. After completion of MariSelvaraj film, we’ll begin 3rd film with Dhanush sir under Vels which is… pic.twitter.com/ZowuYlDsz8— AmuthaBharathi (@CinemaWithAB) June 19, 2026
Also Read… சேயோன் படத்திற்கு போட்டியாக ரிலீஸாகும் சூர்யா47? – தகவல்கள் இதோ!