AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேயோன் படத்திற்கு போட்டியாக ரிலீஸாகும் சூர்யா47? – தகவல்கள் இதோ!

Suriya47 Vs Seyon: சூர்யாவின் நடிப்பில் மிக சிறப்பான கதைக்களத்தில் உருவாகிவரும் படம்தான் சூர்யா47. இப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நடிக்க, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், தற்போது இப்படமானது சேயோன் பட ரிலீஸின்போது வெளியாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேயோன் படத்திற்கு போட்டியாக ரிலீஸாகும் சூர்யா47? – தகவல்கள் இதோ!
சேயோன் Vs சூர்யா47 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jun 2026 21:31 PM IST

கருப்பானாக தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் சூர்யா (Suriya). இந்த 2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த முதல் படமாக, சூர்யாவின் கருப்பு (Karuppu) படமானது புது சாதனையை படைத்திருக்கிறது. இப்படத்திற்கு பின் மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் (Jithu Madhavan) இயக்கத்தில், அவர் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் சூர்யா47 (Suriya47). இப்படத்தின் ஷூட்டிங் பணியானது கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றிருந்தது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார். இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் சிறப்பாக தயாராகிவரும் நிலையில், தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கிறதாம்.

அந்த வகையில் இப்படமும் 2026ம் ஆண்டில் வெளியாகவில்லையாம். இப்படமானது வரும் 2027ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளாராம். இப்படத்தின் ரிலீஸின்போது சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) சேயோன் (Seyon) படமும் வெளியாகுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஓம் படம் இரு பாகமாக உருவாகும்.. இது உண்மையான கதையை மையமாக கொண்டது – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!

சேயோன் படத்துடன் மோதும் சூர்யா47:

சிவகார்திகேயன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுவரும் படம் சேயோன். இதை தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, கமல்ஹாசன் தயாரித்துவருகிறார். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என ஆரம்பத்திலே அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கும் முன்புதான் இதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: நைட்டு நிலா.. ஜி.வி.பிரகாஷின் வெக்கை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

இந்நிலையில், தற்போது முதற்கட்ட படப்பிடிப்புகள் மட்டுமே முடிவடைத்துள்ளதாம். அதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸை வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஆனால் இதுகுறித்த அறிவிப்பை படக்குழு இன்னும் உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா47 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வைரலாகும் பதிவு:

சூர்யாவின் 47வது படமானது பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், விரிவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. சூர்யாவின் பிறந்தநாளை வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் வரும் நிலையில், அன்று இதன் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us