AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rajkumar Periasamy: ஓம் படம் இரு பாகமாக உருவாகும்.. இது உண்மையான கதையை மையமாக கொண்டது – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!

Director Rajkumar Periasamy About Dhanush OM Movie: நடிகர் தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமியின் கூட்டணியில் சிறப்பாக உருவாகிவரும் படம்தான் ஓம். இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ராஜ்குமார் பெரியசாமி, இப்படமானது உண்மை கதையை மையப்படுத்தி, இரு பாகங்களாக உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Rajkumar Periasamy: ஓம் படம் இரு பாகமாக உருவாகும்.. இது உண்மையான கதையை மையமாக கொண்டது – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!
தனுஷ் ஓம் படம் பற்றி ராஜ்குமார் பெரியசாமிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Jun 2026 21:29 PM IST

தமிழில் அமரன் திரைப்படத்தை (Amaran) இயக்கியதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy). இவரின் இயக்கத்தில் இப்படத்திற்கு முன் சில படங்கள் வெளியாகியிருந்தாலும், அது அவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இந்நிலையில் அமரன் பட வெற்றிக்கு பின், தனுஷின் (Dhanush) புது படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இப்படத்திற்கு தற்காலிகமாக D55 என டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு “ஓம் : அத்தியாயம் 1: உத்திரம்: தி பிளட் ஆப் வுட்” (OM : Chapter 1: Udhiram: The Blood of Wood) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ், மம்முட்டி (Mammooty), சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) போன்ற பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.

மேலும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ஓம் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகன்.. ஜோடியாகும் கிரித்தி ஷெட்டி!

ஓம் படம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்த விஷயங்கள்:

அந்த நிகழ்ச்சியில் ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில், ஓம் படமானது இரு அத்தியாயமாக உருவாக்கப்படவுள்ளது. தற்போது முதல் பாகத்திற்கான ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இப்படமானது ஒரு ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவுடன் இருக்கும். இது நிஜ வாழ்க்கையை அடிப்படியாக கொண்ட படமாகும். இப்படத்திற்காக பல ஆராச்சிகளை நாங்கள் செய்துள்ளோம். இப்படத்திற்கு ஓம் என டைட்டில் வைப்பதற்கான காரணம் விரைவில் வெளியாகும்.

இதையும் படிங்க: அமரன் பட இயக்கத்தில் தனுஷ்.. D55 பட டைட்டில் இதுதான் – வெளியானது கிளிம்ப்ஸ்!

இந்த டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடலுக்கான வரிகளை தனுஷ் சாரே எழுதியிருந்தார். மேலும் சிலர் குழப்பத்தில் இருக்கலாம், புஷ்பா 1 படம்போலவே இப்படத்திலும் செம்மர கடத்தல்கள் காட்டப்படுகிறது என்பதால், இது அந்தப் படம் போன்றது அல்ல.. இது நான் நீண்டநாளா மனதில் வைத்திருக்கும் ஒரு யோசனை மற்றும் நினைவை பற்றிய கதையாகும்” என அதில் அவர் தனது திட்டங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

ஓம் படத்தின் அறிவிப்பு ப்ரோமோ குறித்து தனுஷ் வெளியிட்ட பதிவு:

இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 50-60 சதவீதம் முடிவடைந்ததாம். தற்போது விறுவிறுப்பாக படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us