AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த 7 நாட்களுக்கு சில்லென மாறப்போகும் தமிழகம்.. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு சில்லென மாறப்போகும் தமிழகம்.. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Aug 2026 14:52 PM IST

ஆகஸ்ட் 12, 2026: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு வளிமண்டலத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

ஆகஸ்ட் 13ஆம் தேதி, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மழை:

ஆகஸ்ட் 15ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “50% எம்.பி இடங்கள் அதிகரித்தாலும் ஆபத்துதான்!”.. தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

ஆகஸ்ட் 18ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

3 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாகப் பதிவாகக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “வெற்றி வீடு திட்டத்திற்கு இனி ரூ.5 லட்சம்!”.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us