Samantha: எங்கள் தங்கம் பட ரிலீஸ்.. கணவருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த சமந்தா!
Samantha Tirupati Visit: தென்னிந்திய மக்கள் மத்தியில் புகழப்பட்டுவரும் நடிகையாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியிருக்கு புதிய படம்தன் எங்கள் தங்கம் (மா இன்டி பங்காரம்). இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு இன்று (18/06/2026) தனது கணவர் மற்றும் படக்குழுவுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
ஒருகாலத்தில் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து, ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக இருந்துவந்தவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் பெரிதாக எந்த படங்களும் வெளியாகவில்லை என்று கூறலாம். இவரின் அதிரடி ஆக்ஷன், ரசிகர்கள் எதிர்பார்க்கும் சூப்பர் ஹிட் படமாக தயாராகியுள்ளதுதான் எங்கள் தங்கம் (Engal Thangam). இப்படமானது தெலுங்கில் மா இன்டி பங்காரம் என்ற பெயரில் உருவாகிவந்த நிலையில், தமிழில் “எங்கள் தங்கம்” என்று இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை இயக்குநர் நந்தினி ரெட்டி (Nandini Reddy) இயக்க, சமந்தா நடித்து தயாரித்துள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே ஹோ பேபி (Oh Baby) என்ற படத்தில் இணைந்திருக்கிறது. இதையடுத்து 2வது முறையாக இணைந்த படம்தான் எங்கள் தங்கம். இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இதை முன்னிட்டு இன்று 2026ம் ஆண்டு ஜூன் 18ம் தேதியில், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தனது கணவர் ராஜ்நிதி மோரு மற்றும் எங்கள் தங்கம் படக்குழுவுடன் சிறப்பாக தரிசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: தளபதி விஜய் அதற்கு 100 சதவீதம் பொருத்தமான நபர் – நடிகை சமந்தா ரூத் பிரபு
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த சமந்தாவின் வைரலாகும் வீடியோ:
@AndhraPradesh
🙏 Actress Samantha, along with Raj Nidimoru, Sreemukhi and director Nandini Reddy, offered prayers at Tirumala Sri Venkateswara Swamy Temple ahead of the release of #MaaIntiBangaram. The film, starring Samantha in the lead, releases on June 19. 🎬✨ #Samantha pic.twitter.com/cZK0didIX0— Gummalla Lakshmana (@GUMMALLALAKSHM3) June 18, 2026
இந்த எங்கள் தங்கம் படமானது சமந்தாவின் பிரம்மாண்ட நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சமந்தா ஆதிரடி மற்றும் ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் தமிழ் நடிகை கௌதமியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், இதை சமந்தா தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்? அட இதுதான்!
2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் இப்படம் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிக ஏதிர்பார்ப்புகள் உள்ளது. சமந்தா கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் முழுக்க முழுக்க கதாநாயகியாக நடித்து அசத்தியிருக்கும் நிலையில், இவருக்கு சிறப்பான வெற்றிப்படமாக இது இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.