AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: அதிரடி ஆக்ஷ்ன் நாயகியாக சமந்தா.. எங்கள் தங்கம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

Maa Inti Bangaaram (Engal Thangam Movie Trailer) : தென்னிந்திய சினிமாவில் நடிகையாகவும், ரசிகர்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்கும் நபராகவும் இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் மா இன்டி பங்காரம் (எங்கள் தங்கம்). இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

Samantha: அதிரடி ஆக்ஷ்ன் நாயகியாக சமந்தா.. எங்கள் தங்கம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
சமந்தா எங்கள் தங்கம் படத்தின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Jun 2026 21:27 PM IST

நடிகை சமந்தா (Samantha) மற்றும் பெண் இயக்குநர் நந்தினி ரெட்டியின் (Nandhini Reddy) கூட்டணியில் உருவாகியுள்ள 2வது திரைப்படம்தான் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram). இப்படத்திற்கு தமிழில் “எங்கள் தங்கம்” (Engal Thangam) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படமானது சிறப்பான பெண்ணியம் குறித்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் சமந்தா குடும்ப பெண்ணாகவும், அதிரடி ஆக்ஷன் கதநாயகியாகவும் நடித்துள்ளார். இது சமந்தாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு வரும் திரைப்படமாகும். அதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக ஏதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஓ பேபி (Oh Baby) என்ற படத்தில் சமந்தா நடித்திருந்தார். இப்படமும் பெண்ணியம் சார்ந்த ஒரு காமெடி மற்றும் எமோஷனல் திரைப்படமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது இணைந்துள்ள படம்தான் மா இன்டி பங்காரம்.

இந்த படம்தான் வரும் 2026ம் ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியாகுவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ள நிலையில், இன்று இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் தமிழ் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது இதன் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: டியூட் 2 படமானது உருவாகுமா? – இயக்குநர் கீர்த்திஸ்வரன் கொடுத்த அப்டேட்!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் (எங்கள் தங்கம்) ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

 

சமந்தாவின் மா இன்டி பங்காராம் படத்தின் சென்சார் அப்டேட்:

இதில் சமந்தா இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் கௌதமி, குல்ஷன் தேவையா, டிஜிந்தன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் வெளியீட்டின் மீது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதை சமந்தாவின் தயாரிப்பு நிறுவனமான ட்ரலலா மூவிங் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படமானது கிட்டத்தட்ட ரூ 50 கோடி பொருட்செலவில் தயாராகியுள்ளதாம்.

இதையும் படிங்க: ஒரே படத்தில் மூன்று ரோலில் விஷால்.. அவரே இயக்கிய மகுடம் திரைப்படத்தின் டீசர் இதோ!

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், தாஸத்யா என்ற முதல் பாடல் வெளியாகியிருந்தது. இப்பாடலை அடுத்ததாக தற்போது “நின்னு ச்சூஸ்து அடிகே ஆகாசம்” என்ற பாடலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழை கொடுத்துள்ள நிலையில், 13 வயதிற்கும் மேல் உள்ள நபர்கள் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படம் சமந்தாவிற்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us