AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அவர் திரையில் மட்டும் ஹீரோ இல்லை… முதல்வருடான சந்திப்புக்கு பிறகு சமந்தா கருத்து

எங்கள் தங்கம் பட நிகழ்ச்சிக்காக சென்னை வந்த நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை இன்று சந்தித்தார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், முதல்வர் விஜய் திரையில் கதாநாயகனாக மட்டுமே இருக்கப் பிறந்தவர் அல்ல என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன் என்றார்.

அவர் திரையில் மட்டும் ஹீரோ இல்லை…  முதல்வருடான சந்திப்புக்கு பிறகு சமந்தா கருத்து
முதல்வர் விஜய் - சமந்தா
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Jun 2026 21:08 PM IST

நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை ஜூன் 17, 2026 இன்று நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, நீங்கள் ஆரம்பத்தில் கண்ட கனவை விட, உங்கள் வாழ்க்கை மிக பிரமாண்டமானதாக மாறக்கூடும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா தற்போது நந்தினி ரெட்டி இயக்கத்தில் மா இண்டி பங்காரம் என்ற ஆக்சன் படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜூன் 19, 2026 அன்று திரைக்கு வரவிருக்கிறது.

முதல்வருடான சந்திப்புக்கு பிறகு சமந்தா கருத்து

இந்தப் படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் ஓ பேபி பட வெற்றிக்கு பிறகு சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் கதையை சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமோரு எழுதியுள்ளார். ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்துகொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக தான் முதல்வர் விஜய்யை அவர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று நான் சென்னையில் தரையிறங்கியபோது, ​​எனக்குள் ஒரு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில், நான் நமது முதல்வரை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன்.

சமந்தாவின் எக்ஸ் பதிவு


முதல்வர் விஜய் திரையில் கதாநாயகனாக மட்டுமே இருக்கப் பிறந்தவர் அல்ல என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அவரது ஆற்றல், ஆளுமை மற்றும் மக்கள் அவரிடம் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றைப் பார்க்கும்போது, ​​அவர் ஏதோ ஒரு பெரிய நோக்கத்திற்காகவே உருவானவர் என்று தோன்றியது. முற்றிலும் புதியதொரு களத்தில் அடியெடுத்து வைப்பதற்குத் தேவைப்படும் துணிச்சல்தான் என்னை மிகவும் ஈர்க்கிறது.

ஏற்கனவே தன்னை நிரூபித்த ஒரு துறையை விட்டு, மிக உயர்ந்த சவால்கள் நிறைந்த ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பது சாதாரணமான விஷயமில்லை. ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையாலேயே அத்தகைய முடிவை எடுத்திருக்கிறார். நமது வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், நம்மையும் மீறி சமூகத்திற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்று சிந்திப்பதன் மூலம், இன்னும் பெரிய காரியங்களைச் செய்வதற்கான உந்துதலை நாம் அனைவரும் பெறுகிறோம். ஆனால், மிகச் சிலரே அந்த அழைப்பை ஏற்றுச் செயல்படுகிறார்கள்.

விஜய் சார், அவர் மீது ஏற்கனவே நம்பிக்கை வைத்திருப்பவர்களையும் ஆச்சரியப்படுத்துவார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் வகிக்கும் பதவியின் காரணமாக அல்ல, மாறாக அவர் அந்தப் பணியை அணுகும் நோக்கத்தின் காரணமாகவே அவர் அப்படிச் செய்வார். அவருக்கு வலிமையும், ஞானமும், தனது பாதையில் உறுதியாகத் தொடர்வதற்கான துணிச்சலும் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு செய்தி, நீங்கள் முதலில் கண்ட கனவை விட, வாழ்க்கை மிகப்பரியதாக அமையக்கூடும் என்பதை இது உங்களுக்கு நினைவூட்டுவதாக இருக்கட்டும் என்றார்.

Follow Us