கருப்பு பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து படக்குழு வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
Karuppu Movie Team Expressing Gratitude For The Success | தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற கருப்பு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து படக்குழு ஒரு பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் பலப் படங்கள் தொடர்ந்து இதுவரை வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. கடந்த 2025-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் கருப்பு. நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஆ.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2024-ம் ஆண்டே வெளியானது. தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டிலேயே வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டு தொடங்கிய போது பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் படம் அப்போது வெளியாகவிலலை. இதனால் கோபமடைந்த சூர்யாவின் ரசிகர்கள் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை கடுமையாக சாடினர். இப்படி இருக்கும் நிலையில் படம் மே மாதம் 14-ம் தேதி வெளியாவாதாக அறிவிக்கப்பட்டு பிறகு 15-ம் தேதி வெளியானது. பல சிக்கல்களுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




கருப்பு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த படக்குழு:
இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் முடிவடைவதற்கு முன்னதாகவே உலகம் முழுவதும் ரூபாய் 340 கோடிகாள் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது படக்குழு வெளியிட்டுள்ள பதிவில் நடிகர் சூர்யா தங்கள் மீது வைத்து உள்ள நம்பிக்கைதான் அடுத்தடுத்து ஓட உத்வேகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் கருப்பு திரைப்படத்திற்குப் பங்களித்த நிதியுதவியாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் ஒவ்வொரு தனிநபருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் நம்பிக்கை, ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பிற்கு நன்றி. நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளனர்.
Also Read… ரைஸ் ஆஃப் லிங்கா… இன்று மாலை வெளியாகிறது மகுடம் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ!
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
With sincere gratitude to all our financiers, distributors, cast, crew and every individual who contributed to #Karuppu/#Veerabhadrudu. Thank you for your trust, support, and dedication. We are truly grateful. 🙏 pic.twitter.com/DaN8V2KkeJ
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 16, 2026
Also Read… காமெடிக்கு பஞ்சமே இல்ல… ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் கெணத்த காணோம் படம்