காமெடிக்கு பஞ்சமே இல்ல… ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் கெணத்த காணோம் படம்
Kenatha Kanom has been released on Jio Hotstar OTT | நடிகர் யோகி பாபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் கெணத்த காணோம். இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வரும் நடிகர் யோகி பாபு அவ்வபோது படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு மீண்டும் மற்ற நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்தாலும் தொடர்ந்து தமிழ் மொழியில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து காமெடி வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். அதன்படி நாயகன் மற்றும் காமெடியனாக தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. அதன்படி யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற கெணத்த காணோம் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த அந்த கெணத்த காணோம் படத்தினை இயக்குநர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கி இருந்தார். காமெடி ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், ஜார்ஜ் மரியன், வணக்கம் கந்தசாமி, கலைப்பாண்டியன் மற்றும் கவிதா பாரதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் கெணத்த காணோம் படம்:
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ஒரு சட்டையர் படமாக வெளியாகி இருந்தது.மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று 16-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு முதல் கெணத்த காணோம் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பாடிய தனுஷ் – அப்டேட் கொடுத்த படக்குழு
கெணத்த காணோம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Apdi enna yalumba irukum??? 😱☠️#KenathaKanom streaming from June 16 only on #JioHotstar #KenathaKanomOnJioHotstar #KenathaKanomStreamingFromJune16 #KenathaKanomOnJHS #JioHotstarTamil @iYogiBabu @LovelynChand @RaichalRabecca #ActorRamakrishnan @sureshsangaiah @Thiyagudop1… pic.twitter.com/WdmC9BfaMs
— JioHotstar Tamil (@JioHotstartam) June 12, 2026
Also Read… RJ Balaji: நான் படத்திற்காக உழைக்கவில்லையா? திருப்பூர் சுப்புரமணியமுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி!