AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜூன் மாதம் வெளியாகும் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படம்

Arjunan Per Pathu Movie Release Update | தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவரது நடிப்பில் 300-வதாக உருவாகி உள்ள படத்தின் ரிலீஸ் எப்போது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜூன் மாதம் வெளியாகும் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படம்
அர்ஜுனன் பேர் பத்துImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 May 2026 22:15 PM IST

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு பிறகு அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு தனது முடி மற்றும் தோற்றம் காரணமாக ம்க்களிடையே பிரபலம் ஆனார். பிறகு அடுத்தடுத்து காமெடிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். தொடர்ந்து இவரது காமெடிகள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இவரது காமெடி படத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பல முன்னணி நடிகர்கள் கால் ஷீட்டிற்கு காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் யோகி பாபு தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த யோகி பாபு சிலப் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். அந்தப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் வெளியாகும் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படம்

இப்படி இருக்கும் நிலையில் பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வரும் யோகி பாபுவின் 300-வது படமாக தற்போது உருவாகி உள்ளது அர்ஜுனன் பேர் பத்து. இந்தப் படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் காளி வெங்கட், அருள் தாஸ், மைனா நந்தினி, சென்ட்ராயன், அருவி புகழ் மதன், சௌந்தர்யா, செந்தில் ராயன், ஹலோ கந்தசாமி, பாவ லட்சுமணன், லெனின் பாரதி, ரஞ்சன் குமார் மற்றும் சுப்பிரமணியம் சிவா உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Also Read… சூர்யா சார் அதைச் செய்ய நான்தான் வற்புறுத்தினேன் – கருப்பு படத்தின் வைரல் டயலாக் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் கான் சிட்டி படத்திலிருந்து வெளியான ஃப்ராடு பயலே பாடல்

Follow Us