AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடிடியில் வெளியாகி உள்ள தனுஷின் கர படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Kara Movie OTT Review Here | நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் கர. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தைப் பார்க்கலாம்.

ஓடிடியில் வெளியாகி உள்ள தனுஷின் கர படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
கரImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 May 2026 18:46 PM IST

தமிழ் சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு முதலாவது படமாக வெளியானது கர. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி உள்ளார். க்ரைம் த்ரில்லர் பணியில் வெளியான இந்தப் படத்திற்கு முன்னதாக இயக்குநர் விக்னேஷ் ராஜா போர் தொழில் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் படம் தான் அவர் அறிமுகம் ஆன முதல் படம். இரண்டாவது படத்திலேயே நடிகர் தனுஷை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

இந்த கர படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜு தனுஷின் மனைவியாக நடித்து இருந்தார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார் அப்பாவும் தாய்மாமனாக நடிகர் கருணாஸ் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், பிரித்வி பாண்டியராஜ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் கர படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷின் கர படத்தின் கதை என்ன?

படத்தின் ஆரம்பத்திலேயே எம்.எல்.ஏ வீட்டிற்கு திருட செல்கிறார்கள் தனுஷும், பிரித்வியும். அபோது தனுஷ் இதுதான் தனது கடைசி திருட்டு என்றும் இனி தன் காதலி மமிதாவை திருமணம் செய்துகொண்டு வாழப் போவதாக கூறிவிட்டு உள்ளே திருடுகின்றனர். இப்படி இருக்கும் போது அந்த வீட்டின் உரிமையாளர்கள் அங்கே வந்துவிட பிரித்வியை மட்டும் தப்பிக்க வைத்துவிட்டு மாட்டிக் கொள்கிறார் தனுஷ். அந்த வழக்கை விசாரிக்கும் சுராஜ் வெஞ்சரமூடு சர்வீஸ் முடிய போகுது இன்னும் நாம எதுலையும் பெருசா தெரியல என்பதற்காக வழக்கை தவறாக சித்தரிப்பது மட்டும் இன்றி தனுஷ் செய்யாத குற்றங்களுக்கும் வழக்கு பதிவு செய்ய திட்டமிடுகிறார்.

இதனைக் கேட்ட தனுஷ் சுராஜை தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பித்துவிடுகிறார். அதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு காதலி மமிதாவை திருமணம் செய்துக்கொண்டு ஆந்திராவில் வாழ்ந்து வருகிறார். அங்கு இருவரும் ஹோட்டலில் வேலை செய்கிறார்கள். ஆனால் வருமானம் போதவில்லை. சொந்தமாக மெஸ் தொடங்குவதற்காக லோன் கேட்டு சென்ற பேங்கில் நகை அல்லது இடம் பத்திரம் ஏதேனும் கேட்கிறார்கள்.

Also Read… இன்று வெளியாகிறது பரிமளா & கோ படத்தின் ட்ரெய்லர்!

இதனால் தனது சொந்த ஊரில் உள்ள அப்பா கே.எஸ்.ரவிக்குமாரின் இடத்தை விற்று பணம் வாங்க செல்கிறார். அந்த ஊரில் இருந்து ஓடி வருவதற்கு முன்பு தனுஷ் அப்பாவின் பணத்தை திருடுவிட்டு வருகிறார். ஊருக்கு சென்ற போதுதான் ஊரில் உள்ள அனைவரும் விவசாயத்திற்காக ட்ராக்டர் லோன் எடுத்துள்ளனர். அதற்கு அடமானமாக இடத்தை வைத்துள்ளனர். அதற்கு வட்டி கட்ட முடியாமல் பலரின் நிலங்களை பேங் ஜப்தியும் செய்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் மகன் வந்ததை நினைத்து சந்தோசப்பட்டு கொண்டு இருந்த கே.எஸ்.ரவிக்குமாருக்கு அவன் பணத்திற்காக வந்தான் என்று தெரிந்தது மட்டும் இன்றி வங்கியில் இருந்து வந்த ஜப்தி நோட்டீஸை பார்த்து மனமுடைந்து உயிரிழந்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

Also Read… ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் கதை இதுதான் – இயக்குநர் ராஜேஷ் ஓபன் டாக்

Follow Us