Dhanush: நான் அதற்காகவே கார்த்தியின் பருத்திவீரன் படத்தை பார்த்தேன் – தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
Dhanush About Karthi: தென்னிந்திய மக்கள் மத்தியில் நெருக்கமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ், கார்த்தியின் பருத்திவீரன் படத்தை பார்த்தது மற்றும் கார்த்தியின் நடிப்பு பற்றி பேசியுள்ளார்.
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. தமிழ் சினிமாவில் லீட் நாயகனாக இருந்துவந்த இவர், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற சினிமாவிலும் மக்களை ஈர்க்கும் நாயகனாக இருந்துவருகிறார். தனுஷின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 4 இந்தி திரைப்படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் தற்போது தெலுங்கு சினிமாவிலும் நாயகனாக தனுஷ் நடிக்க தொடங்கிவிட்டார். இவ்வாறு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தனுஷ் படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துவருகிறார். சினிமாவில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் நிலையில், தற்போதுவரையிலும் நாயகனாகவே படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ், கார்த்தியின் (Karthi) பருத்திவீரன் (Paruthiveeran) படத்தை பார்த்தது மற்றும் ஆடுகளம் (Aadukalam) படத்திற்காக, அப்படத்திலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதுபற்றி விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சர்வம் மாயா படத்தில் டெலுலுவாக நான் தான் நடிக்க வேண்டியது – நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஓபன் டாக்
கார்த்தியின் பருத்திவீரன் திரைப்படத்திலிருந்து கற்றுக்கொண்ட விஷயம் குறித்து பகிர்ந்த தனுஷ்:
அந்த நிகழ்ச்சியின்போது பேசிய தனுஷ், “பருத்திவீரன் படம் வந்த ஆரம்பத்தில் நான் பார்க்கவில்லை. அதை பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை, ரொம்பநாள் பார்க்கவே முடியல. அப்போதுதான் வெற்றிமாறனுடன் ஆடுகளம் படம், மதுரையை சேர்ந்த கதைக்களத்தில் படம் நடிப்பதாக இருந்தது. அப்போதுதான், கார்த்தியிடம் எதை நான் மீண்டும் செய்யக்கூடாது என நினைத்து, பருத்திவீரன் படத்தை பார்த்தேன். ஏனென்றால் பருத்திவீரன் படம் அப்போது பெரிய சென்சேஷன்.
இதையும் படிங்க: அர்ஜுனின் பிளாஸ்ட் படம் பிளாஸ்ட் ஆச்சா? இல்ல புஸ்ஸுன்னு போச்சா? விமர்சனங்கள் இதோ!
அந்த படத்தை பார்த்துவிட்டு, வெற்றிமாறனிடம் சொன்னே, மதுரை வட்டாரமொழி என்றால் இதுதான், இதை கார்த்தியிடம் நான் என்ன மீண்டும் செய்யமுடியாது. அவர் பண்ணியிருப்பதுபோலவேதான் நான் பண்ணமுடியும் என சொன்னே. அப்போது மதுரை வட்டாரமொழியை கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டேன் , அப்போது கார்த்தியின் மீது எனக்கு ஒரு பெரிய மரியாதையே வந்தது” என அதில் அவர் கூறியிருந்தார்.
தனுஷின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
நடிகர் தனுஷ் தற்போது தொடர்ந்து தமிழ் இயக்குநர்களின் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி55, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி56 மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி 57 என தொடர்ந்து புது புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை 2 படத்திலும் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.