Karuppu: கருப்பு படத்துக்கு சப்போர்ட்.. நீதித்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்.. என்ன நடந்தது?
Suriyas Karuppu Verdict: சூர்யாவின் நடிப்பில் 2026ம் ஆண்டு மே 15ம் உலகமெங்கும் வெளியாகியிருந்த திரைப்படம்தான் கருப்பு. இப்படத்தின் மீது நீதித்துறையை அவமானப்படுத்துவதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதை விசாரித்த நீதிபதிகள் அந்த மனுவை தள்ளிப்படி செய்துள்ளனர். மேலும் கருப்பு படத்திற்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் மற்றும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியிருந்த இப்படமானது திரையரங்குகளில் செமயான வரவேற்பை பெற்றுவருகிறது. கடந்த 2026 மே 15ம் தேதி முதல் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிவரும் நிலையில், இதுவரை கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Chennai High Court), கருப்பு படத்தில், நீதித்துறை மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறான கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளது என புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று 2026 மே 28ம் தேதியில், அதை விசாரித்த நீதிபதிகள் கருப்பு படத்தின் காட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் நீதித்துறையில் இருக்கும் ஊழல் பற்றியும் தெரிவித்துள்ளனர்.




இதையும் படிங்க: கருப்பு படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் சொன்ன கமெண்ட்… ஆர்.ஜே.பாலாஜி ஹேப்பி அண்ணாச்சி
கருப்பு பட புகார் விசாரணையில் நீதிபதிகள் சொன்ன கருத்து:
கருப்பு படத்தின் புகார் இன்று (28/05/2026) விசாரிக்கப்பட்ட நிலையில், அப்போது பேசிய நீதிபதிகள் ” நீதித்துறையில் ஊழல் இருக்கிறது, அதை யாராலும் மறுக்க முடியாது. நீதிபதிகளை புனிதமாக கருதுவதற்கு அவசியம் இல்லை. அப்படத்தில் ஒட்டுமொத்த நீதித்துறையை ஊழல் நிறைந்ததாக சித்தரிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தனது 48-வது படத்திற்காக மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா? வைரலாகும் தகவல்
மேலும் கருப்பு படத்தின் மீது நீதித்துறையை அவமானப்படுத்தியதாக தொடர்ந்த வழக்கினை தள்ளிப்படி செய்துள்ளது. மேலும் கருப்பு படத்தின் காட்சிகள், கருத்து சுதந்திரம் என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சமி நாராயணன் அமர்வு கருத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
கருப்பு திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Memorable moments from the #KaruppuBlastTour ft. our director @RJ_Balaji 🔥#Karuppu – The One @Suriya_offl‘s mega blockbuster in theatres now!
A @SaiAbhyankkar Musical.#KaruppuBlockbuster #VeeraBhadrudu @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans… pic.twitter.com/1vcg6T0rt7— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 26, 2026
கருப்பு திரைப்படமானது இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெளியாகிவருகிறது. சூர்யாவிற்கு இப்படமானது மிகப்பெரும் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. சூர்யாவின் கேரியரில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாகவும் கருப்பு படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.