விஜய் சேதுபதி உடன் கூட்டணி வைக்கும் இயக்குநர் பாலா? வைரலாகும் தகவல்
director Bala is set to team up with Vijay Sethupathi | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவர் தனது அடுத்தப் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பாலா. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சேது என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் பாலா. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும் நடிகர் விக்ரமிற்கு தனது சினிமா கெரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை அப்படியே காட்டும் படமாக இருக்கும் என்பது ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. தொடர்ந்து பாலா இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இறுதியாக தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான படம் வணங்கான். நடிகர் அருண் விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் அவர் காது கேளாத வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் பாலா அடுத்ததாக எந்தப் படத்தை இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அப்டேட் ஒன்று சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.




விஜய் சேதுபதி உடன் கூட்டணி வைக்கும் இயக்குநர் பாலா?
அதன்படி இயக்குநர் பாலா தனது அடுத்த படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதியுடன் கூட்டணி வைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி. இந்தப் படத்திற்கான கதை விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இயக்குநர் மணி ரத்னத்தின் படத்தை முடித்த பிறகு நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பைத் தொடங்குவார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… மம்முட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் – வைரலாகும் பதிவு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director #Bala is set to team up with #VijaySethupathi for his next film. Story discussions for the project are currently underway. Vijay Sethupathi is expected to begin this film after completing the #ManiRatnam project. pic.twitter.com/CFRSUc5alt
— Movie Tamil (@_MovieTamil) May 26, 2026
Also Read… தமிழ் நாட்டில் மட்டும் 10 நாட்களில் கருப்பு படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? அப்டேட் கொடுத்த படக்குழு