தமிழ் நாட்டில் மட்டும் 10 நாட்களில் கருப்பு படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? அப்டேட் கொடுத்த படக்குழு
Karuppu Movie Box Office Collention In Tamilnadu | நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான கருப்பு படம் 10 நாட்களில் தமிழ் நாட்டில் மட்டும் எவ்வளவு வசூலித்துள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது கருப்பு படம். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கிய இந்தப் படம் கோர்ட் ரூம் ட்ராமாவாகவும் மார்டன் கருப்பு சாமி படமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியாக நடித்து இருந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடித்து இருந்தார். மேலும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் படத்தில் நாயகியாக நடித்து இருந்த நிலையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் இந்திரன்ஸ் கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்த கருப்பு படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதன்படி படம் தமிழ் மொழியில் உருவாகி இருந்தாலும் பான் இந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. உலக அளவில் உள்ள ரசிகர்கள் இந்த கருப்பு படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் வசூல் தொடர்பான அப்டேட்களை படக்குழு தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.
தமிழ் நாட்டில் மட்டும் கருப்பு படம் வசூலித்தது இத்தனை கோடிகளா?
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 10 நாட்களைக் கடந்துள்ளது. உலக அளவில் படம் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் எவ்வளவு வசூலித்தது என்று தொடர்ந்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. அதன்படி சூர்யாவின் கருப்பு தமிழ் நாட்டில் மட்டும் 10 நாட்களில் ரூபாய் 130 கோடிகளை வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சூர்யாவின் ரசிகர்களிடையே நல்ல மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Karuppu strikes a historic, record breaking gross for The One @Suriya_offl 🔥
130 crores in TN, in just 10 days!
A mega blockbuster feast from @RJ_Balaji and team, in theatres now!
A @SaiAbhyankkar Musical.#KaruppuBlockbuster #VeeraBhadrudu @trishtrashers @dop_gkvishnu… pic.twitter.com/PlyYpIybTq— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 25, 2026
Also Read… 15 அன்கட் வெர்ஷனில் வெளியானது கருப்பு படம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்



