AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: ஒரு அரை மணிநேரத்தில் முடிவுபண்ண விஷயம்.. எதிர்பார்க்காத பெரிய வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி – சூர்யா பேச்சு!

Suriyas Karuppu Success Meet: தென்னிந்திய சினிமாவிப்பில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதியில் வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு. இப்படமானது வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இன்று இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றிருந்தது. அதில் கலந்துகொண்ட சூர்யா, இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Suriya: ஒரு அரை மணிநேரத்தில் முடிவுபண்ண விஷயம்.. எதிர்பார்க்காத பெரிய வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி – சூர்யா பேச்சு!
சூர்யா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 May 2026 15:46 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் 2026 மே 15ம் தேதியில் திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு (Karuppu). இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி(RJ Balaji) இயக்கியிருந்த நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திரித்திருந்தார். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) மிக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இதில் சூர்யா நீதியை காக்கும் கருப்பசாமியாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இப்படத்தில் சூர்யாவின் ஸ்டைல், அவரின் ஆக்ஷன் திரையில் அவர் இருக்கும் பிரசன்னம் அனைத்தும் புல்லரிக்க வைத்தது என்று கூறலாம். இப்படமானது உலகளவில் சுமார் ரூ 207 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.

அந்த வகையில் இன்று 2026 மே 23ம் தேதியில் சென்னையில் இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழு நடத்தியுள்ளது. இந்த விழாவில் நடிகர் சூர்யாவும் கலந்திருந்த நிலையில், கருப்பு படத்தின் வெற்றி மற்றும் தனது ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கருப்பு படத்தை அவர்களுக்காகதான் உருவாக்கினேன் – ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

கருப்பு படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்து சூர்யா பகிர்ந்த விஷயம்:

கருப்பு பட வெற்றிவிழாவில் பேசிய சூர்யா, “இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் நேரில் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும் என தோன்றியது. ஒரு 2 வருடத்திற்கு முன்பு ஒரு அரைமணிநேரம் அல்லது 45 நிமிடத்தில் முடிவு பண்ண திரைப்படம் இது. சட்டுனு எந்த படத்திலும் நடிப்பதற்கு நான் முடிவெடுத்ததில்லை. அன்னைக்கு எல்லாமே சரியாக இருந்த மட்டகிரி இருந்தது. இது முழுக்கவே இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியுடைய பார்வைதான். அவர் சொல்லும்போதே திரையரங்குகளில் வேறமாதிரி இருக்கும் என நம்பிக்கை இருந்தது. நம்பிக்கையுடன்தான் எல்லா படமும் பண்ணுறோம். ஆனால் முதல் நாளிலிருந்தே எல்லாமே சரியாக போச்சு. அதற்கு எல்லாமே ட்ரீம் வாரியர் பிரகாஷ் மற்றும் பிரபுதான் காரணம். எல்லா முடிவையும் சரியாக எடுத்ததற்கு, சரியாக எடுக்கவைத்த கருப்பசாமிக்கும் நன்றியை சொல்லவேண்டும்.

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

இது ஆசைப்பட்டது, எதிர்பார்க்காத பெரிய வெற்றியை கொடுத்த உங்களுக்கு (மக்கள்) அனைவருக்கும் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கருப்பு படக்குழுவின் சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சமீபகாலமாக இதுபோன்ற வரவேற்பு எந்த படத்திற்கும் பார்க்கவில்லை, இப்படத்திற்கு ஒரு அன்பு கிடைத்திருக்கிறது. இப்படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் இருக்கிறது என அனைவரும் நம்புகிறோம்” என அதில் அவர் கூறியிருந்தார்.

கருப்பு பட வெற்றிவிழாவில் சூர்யா பேசியது தொடர்பான வீடியோ பதிவு:

கருப்பு படமானது 8 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களை விடவும் இது மிகவும் அதிகம். தமிழகத்தில் சூர்யாவின் படத்திற்கு கிடைத்திருக்கும் முதல் ரூ 100 கோடி வசூல் கருப்பு படத்திற்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us