AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.. தவெக அரசு- முதல்வர் விஜய்க்கு எடப்பாடி நறுக் கேள்வி!

Edappadi Criticized CM Vijay: காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் எச்சரிக்கை விட தயாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், விமர்சனத்தை முன்வைத்தார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.. தவெக அரசு- முதல்வர் விஜய்க்கு எடப்பாடி நறுக் கேள்வி!
எடப்பாடி விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Jul 2026 20:11 PM IST

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கான பங்கீட்டு நீரை பெற்றுத் தருவது தொடர்பாக தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் தொழிலுக்கு காவிரி நீரை நம்பி உள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவையாக காவிரி நீர் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக நாம் கர்நாடக மாநிலத்திடம் கையேந்தி நிற்க வேண்டும் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். இதனால், காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை உணர மறுக்கின்றனர். காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதி நீர் தகராறு தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றமும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி பல்வேறு தீர்ப்புகளை வழங்கிய பின்னரும் அதனை கர்நாடக ஆட்சியாளர்கள் உதாசீனம் படுத்தி வருகின்றனர்.

கர்நாடக வளர்ச்சிக்கு தமிழர்களின் உழைப்பு காரணம்

கர்நாடக மாநிலத்தின் பெரும் வளர்ச்சிக்கு அங்கு வாழும் தமிழர்களின் உழைப்பு காரணம் என்பதை அம் மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் மறந்துவிடக்கூடாது. காங்கிரஸ் அரசின் நீர்ப்பாசன துறை அமைச்சர் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் தர உத்தரவிடவில்லை எனவும் தமிழகத்திடம் இருந்து காவிரியில் உரிய பங்கு நீரை திறந்து விட எந்த கோரிக்கையையும் விடவில்லை என்று செய்திகள் வெளிய வந்துள்ளன.

மேலும் படிக்க: மகளிர் இலவச பேருந்து பயண திட்டம்.. திடீர் முடிவு எடுத்த தமிழக அரசு.. என்ன அது!

தீர்ப்புகளை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும்

தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற காவிரி ட்ரிபியூனல் தீர்ப்பையும், அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் கர்நாடகா அரசின் முறையாக செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிப்பதே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும். ஆனால், இதனை மறைத்து விட்டு மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை. தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக நீர் பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சொல்வது பொய்யாகும்.

தவெக அரசு கைக்கட்டி வேடிக்கை பாரக்கக்கூடாது

தமிழக மக்களின் வாழ்வோடு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் விளையாடுவதை தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்க கூடாது. கர்நாடகா அரசு காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்கு நீரை பெறுவதற்கு தமிழக வெற்றிக் கழக அரசின் முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும்.

தவெக அரசு- முதல்வருக்கு நறுக் கேள்வி

காவிரியின் தமிழகத்துக்கான பங்கு நீரை கர்நாடகா அரசு உடனடியாக விடுவிக்கவில்லை எனில், தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சியை எச்சரிப்பதற்கு முதல்வர் விஜய் தயாரா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க: நெடுஞ்சாலை ஊழல் புகார்.. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரிலீஃப்… ஆனால் கோர்ட் போட்ட அதிரடி கண்டிஷன்!

Follow Us