IND vs ENG: கடந்த 14 ஆண்டுகளிலும் 6 தொடர் வெற்றி.. இதுவரை இல்லாத அச்சுறுத்தலில் இந்திய அணி!
IND vs ENG 4th T20: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே குறைந்தது 2 போட்டிகளையாவது கொண்ட டி20 தொடர்களின் பயணம் 2012 டிசம்பரில் தொடங்கியது. முதல் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இருப்பினும், அதன்பிறகு 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட அனைத்து டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
2026 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, இந்திய அணிக்கு (Indian Cricket Team) இப்படி ஒரு மோசமான நிலை ஏற்படும் என்று பிசிசிஐயோ, இந்திய ரசிகர்களோ கற்பனை செய்திருக்க முடியாது. 2026 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற சில மாதங்களிலேயே, இதே இந்திய அணி அயர்லாந்திடம் டி20 தொடரை இழந்தது. அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்தது இதுவே முதல்முறையாகும். அதனை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான (IND vs ENG) தோல்வி குறித்த அச்சம் பெரிதாக சூழ்ந்திருந்தது. இன்று அதாவது 2026 ஜூலை 9ம் தேதி பிரிஸ்டலில் நடைபெறவுள்ள நான்காவது டி20 போட்டியில், இந்திய அணி தொடர் தோல்வியின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால், இந்தியா-இங்கிலாந்து டி20 தொடரின் வரலாற்றில் இதுவரை காணப்படாத ஒரு நிகழ்வாக அமையும்.
ALSO READ: வாழ்வா சாவா போட்டி! வெற்றியை நிலைக்குமா..? 4வது டி20 இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்!
அயர்லாந்திடம் டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாகத் தோற்ற பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில், இந்தியா இந்தத் தொடரில் ஆடிய 3 போட்டிகளில் 2ல் தோல்வியடைந்துள்ளது. தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது, இல்லையெனில் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இந்திய அணியின் தற்போதைய ஆட்டத்திறனைக் கருத்தில் கொண்டால், இன்றைய போட்டியிலேயே தொடரின் முடிவு தீர்மானிக்கப்பட்டிருக்கவும் கூடும்.




முதல் முறையாக தொடரை இழக்கும் அபாயம்
இன்றைய போட்டியில் பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறும் 4வது டி20 போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், தொடரைக் காப்பாற்ற இந்திய அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். அதன் பிறகு, 5வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும் இருப்பினும், பிரிஸ்டலில் தனது தொடர் தோல்விகளை முறியடிக்க இந்திய அணி தவறினால், அது இங்கிலாந்திடம் தனது முதல் டி20 தொடர் தோல்வியை சந்திக்கும்.
ALSO READ: இந்திய அணிக்கு மழை வில்லனா? இங்கிலாந்து அணிக்கு சாதகமா? வானிலை நிலவரம் இதோ!
இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர்:
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே குறைந்தது 2 போட்டிகளையாவது கொண்ட டி20 தொடர்களின் பயணம் 2012 டிசம்பரில் தொடங்கியது. முதல் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இருப்பினும், அதன்பிறகு 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட அனைத்து டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக, 2012 முதல் 2026 வரை சுமார் 14 ஆண்டுகளில் இந்தியாவும் இங்கிலாந்தும் இதுபோன்ற 6 தொடர்களில் விளையாடி, அவற்றில் 5ல் வெற்றியும் ஒன்றில் சமனும் கண்டன. இது ஏழாவது தொடராகும். மேலும் இது இந்திய அணியின் வெற்றிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கம்பீர் ஜோடி படைக்கவில்லை என்றாலும், சமன் செய்து சாதனையை தக்கவைத்து கொள்ளலாம்.