மகளிர் இலவச பேருந்து பயண திட்டம்.. திடீர் முடிவு எடுத்த தமிழக அரசு.. என்ன அது!
Magalir Vidiyal Payanam scheme: தமிழகத்தில் மகளிர் விடியல் பயண திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதில், விடியல் என்ற வார்த்தை நீக்கம் செய்யப்பட்டு மகளிர் பயணம் என்ற வார்த்தை மற்றும் இடம் பெற்றுள்ளது. அனைத்து பேருந்துகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கும் பட்சத்தில் மகளிர் விடியல் பயணம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், “விடியல்” என்ற வார்த்தை நீக்கம் செய்யப்பட்டு ” மகளிர் பயணம்” என்ற வார்த்தை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் மகளிர் பயணம் என்ற பெயர் பலகையுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இன்றி பயணிக்கும் மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தின் பெயரை விடியல் பயணம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றி உள்ளது.
புதிய மற்றும் பழைய பேருந்துகளில் விடியல் பயணம் பெயர்
இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் அரசு பேருந்துகளில் மகளிர் விடியல் பயணம் என்ற டிஜிட்டல் பெயர் பலகையுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதே போல, பேருந்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் மகளிர் விடியல் பயணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, இந்த திட்டத்தில் விடியல் என்ற வார்த்தை நீக்கப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில் தற்போது இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளிலும், புதிதாக இயக்கப்பட உள்ள பேருந்துகளிலும் விடியல் என்ற வார்த்தை இடம் பெறாமல் மகளிர் பயணம் என்ற வார்த்தை மட்டுமே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ராஜினாமா செய்த 3 எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விசாரணை – வெளியான தகவல்




மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் முதல் முறை முதல்வராக பதவியேற்ற போது கையெழுத்திட்ட 5 கோப்புகளில் முதல் கோப்பானது இந்த மகளிர் விடியல் பயணம் திட்டமாகும். இதற்கு மறுநாள் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது, தமிழக வெற்றி கழகம் அரசு அமைந்துள்ள நிலையில், திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தை மதிப்புமிகு மகளிர் உரிமைத் தொகை என மாற்றம் செய்யப்பட்டது.
திமுக அரசின் திட்டங்கள் பெயர் மாற்றம்
முதல்வர் படைப்பகம் என்ற திட்டத்தை படைப்பகம் எனவும், நான் முதல்வன் என்ற திட்டம் திறன் தமிழ்நாடு எனவும் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தின் பெயர் மகளிர் பயணம் என மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விதிமீறல் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை பாயும் – தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை