விதிமீறல் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை பாயும் – தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி அங்கீகாரமில்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
சென்னை, ஜூலை 9 : புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் அனுமதி சீட்டு பெற நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில் அதனை தவிர்க்க நலம் ஏஐ என்ற திட்டம் ஜூலை 8, 2026 நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாட்ஸ்அப்பிலேயே மருத்துவமனை அறிக்கைகள், குறிப்புகளை பெறலாம் என கூறப்படுகிறது. இது தமிழக மருத்துவத்துறையில் முக்கிய மாற்றமாக பாரக்கப்படுகிறது.
தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி அங்கீகாரமில்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், அங்கீகாரமற்ற நிறுவனங்கள் குறித்து புகார் வரும் பட்சத்தில், ஆய்வு செய்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
சில மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்படும் என கூறப்படுகிறது. சில கல்வி நிறுவனங்களில் சில படிப்புகளுக்கு உரிய அனுமதியின்றி செயல்படுவதாகவும், ஆய்வகங்கள் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஜூலை 8, 2026 நேற்று தமிழக முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், செயலர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மருத்துவமனைக்குள் சென்ற முதல்வர் பல்வேறு வார்டுகளை பார்வையிட்டார். பின்னர், மருத்துவமனை இயக்குநரின் அறைக்கு சென்று பார்வையாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்த முதல்வர், மருத்துவமனையின் செயல்பாடுகள், சிகிச்சை விவரங்கள், வசதிகள், கட்டமைப்பை மருத்துவர் குப்புலட்சுமியிடம் கேட்டறிந்தார். இது போன்ற திடீர் ஆய்வுகள் இனி அடிக்கடி நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.