AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 5 சிறுவர்கள் கைது!

Pollachi: பொள்ளாச்சி பேக்கரி உரிமையாளரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த பூவரசன் என்ற வாலிபர் எச்சரிக்கப்பட்டு வேலையை விட்டு நீக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பேக்கரிக்கு வந்த பூவரசனுடன், உரிமையாளரின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றியதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பூவரசனை சரமாரியாகத் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 5 சிறுவர்கள் கைது!
கொலை: 5 சிறுவர்கள் கைது
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Jul 2026 12:22 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான பூவரசன் என்ற வாலிபர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் உள்ள ராஜா என்பவருக்குச் சொந்தமான பேக்கரியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர் ராஜாவின் மனைவி சுதா என்பவருடன் பூவரசனுக்குத் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் ராஜாவுக்குத் தெரியவந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர், பூவரசனை கடுமையாக எச்சரித்ததுடன், இனிமேல் தனது கடையில் வேலை செய்யக் கூடாது எனக் கூறி அங்கிருந்து உடனடியாக வெளியேற்றினார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற ராஜாவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களான பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட ஐந்து சிறுவர்களை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் வந்த பூவரசனும் பேக்கரிக்கு முன் வெடித்த வாக்குவாதமும்

வேலையை விட்டு நீக்கப்பட்டதால் பொள்ளாச்சியை விட்டு வெளியேறிய பூவரசன், கடந்த சில நாட்களாக வேறு பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று அவர் மீண்டும் எதிர்பாராத விதமாக பொள்ளாச்சி பகுதிக்குத் திரும்பியுள்ளார். நேராக ராஜா நடத்தி வரும் பேக்கரிக்கு பூவரசன் சென்றபோது, அங்கு ராஜாவின் மகன்களும், அவர்தம் நண்பர்களான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் நின்று கொண்டிருந்தனர். பூவரசனைக் கண்டதும் ஆத்திரமடைந்த அந்தப் பசங்க, அவரிடம் ஏன் இங்கு வந்தாய் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரத்தில் தாக்கிய சிறுவர்கள்: மயங்கி விழுந்து வாலிபர் பரிதாப மரணம்

வார்த்தை தடிமினாகி வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ராஜாவின் மகன்களும் அவர்களின் நண்பர்களும் சேர்ந்து பூவரசனை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்கள் பலமாகத் தாக்கியதில் நிலைதடுமாறிய பூவரசன், பலத்த காயங்களுடன் திடீரென தரையில் மயங்கி விழுந்தார். சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபர் ஒருவர் பொது இடத்தில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: காங்கிரஸ் பிரமுகரை காரில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் – கோவையில் பரபரப்பு

போலீசார் அதிரடி விசாரணை: 5 சிறுவர்கள் பிடிபட்ட பின்னணி

இதுகுறித்து தகவலறிந்த பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த பூவரசனின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற ராஜாவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களான பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட ஐந்து சிறுவர்களை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow Us