AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராஜினாமா செய்த 3 எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விசாரணை – வெளியான தகவல்

அதிமுக எம்.எல்.ஏ.க்களான தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்ட நிலையில் 3 பேரும் தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் ராஜினாமா செய்த 3 எம்எல்ஏகள் சபாநாயகரை சந்தித்து விளக்கமளித்துள்ளனர்.

ராஜினாமா செய்த 3 எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விசாரணை – வெளியான தகவல்
ராஜினாமா செய்த எம்எல்ஏகள்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Jul 2026 12:06 PM IST

சென்னை, ஜூலை 9 : சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக முன்னிலை வகித்தது. ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். மேலும் அதிமுக எம்எல்ஏகளும் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது சர்ச்சையானது.

ராஜினாமா செய்த 3 எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விசாரணை

இதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைப்பதற்கான நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களிப்பது குறித்து ஈபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி, தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களான தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கொடுத்தனர். இதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்ட நிலையில் 3 பேரும் தவெகவில் இணைந்தனர்.

இதையும் படிக்க : அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் – என்ன நடந்தது?

இதனையடுத்து தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு அதிமுக எம்எல்ஏகளை ராஜினாமா செய்ய வைப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது வரை 6 எம்எல்ஏகள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இந்த 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 17,2026 அன்று சத்யபாமா, மரகதம் குமரவேல் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை 3 எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது தங்களது ராஜினாமா முடிவு குறித்த தெளிவான விளக்கங்களை அவர்கள் சபாநாயகரிடம் தெரிவித்தனர்.

அந்த விளக்க கடிதத்தை ஆளுனரிடமும், தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கனவே மூவரும் விளக்க கடிதம் அளித்திருந்த நிலையில், நேரடியாக விளக்கத்தினை கேட்டு பெற வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இன்றைய தினம் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் விளக்கத்தினை இன்று நேரடியாக வழங்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க : இஸ்லாமாக மாறிய ஒருவருக்கு முஸ்லிம் லெப்பாய்’ சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது.. அரசாணை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம் கிளை..

இந்த நிலையில், தவெகவில் இணைந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் ஜூலை 9, 2026 இன்று மீண்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா குறித்து விளக்கம் அளித்தனர்.  எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் இன்று 11 மணிக்கு தலைமை செயலகத்தில் மீண்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.ஏற்கனவே மூவரும் விளக்க கடிதம் அளித்திருந்த நிலையில், அதனை தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்த நடவடிக்கையை சபாநாயகர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us