AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெடுஞ்சாலை ஊழல் புகார்.. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரிலீஃப்… ஆனால் கோர்ட் போட்ட அதிரடி கண்டிஷன்!

EV Velu Lookout Notice Case: நெடுஞ்சாலைத்துறை ஊழல் தொடர்பாக துறையின் முன்னாள் அமைச்சர் எ. வ. வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிறப்பித்த லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன், விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஊழல் புகார்.. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரிலீஃப்… ஆனால் கோர்ட் போட்ட அதிரடி கண்டிஷன்!
எவ வேலு ஊழல் புகார்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Jul 2026 15:41 PM IST

தமிழகத்தில் கரூர் உள்ளிட்ட இடங்களில் மாநில நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்த பணி மேற்கொள்ளாமல் பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இந்த ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறையின் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது கடந்த ஜூன் 26- ஆம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எ.வ.வேலு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த திங்கள்கிழமை ஆஜராகுமாறு எ.வ. வேலுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

விசாரணைக்க ஆஜராகாத எ. வ. வேலு

ஆனால், அன்றைய தினம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி உடல்நல குறைவு காரணமாக சிங்கப்பூரில் எ.வ. வேலு சிகிச்சைக்கு சென்றிருப்பதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எ.வ. வேலு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை ( ஜூன் 9) விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க: விதிமீறல் இருந்தால் குற்றவியல் நடவடிக்கை பாயும் – தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை

லுக் அவுட் நோட்டீசுக்கு எதிராக மனு

அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி வருகிற ஜூலை 15- ஆம் தேதி ( புதன்கிழமை) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் முன்னால் அமைச்சர் எ. வ. வேலு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன், அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிறப்பித்த லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

எ. வ. வேலு மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது

மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் எ. வ. வேலு மனுவுக்கு ஜூலை 27- ஆம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை முன்னாள் அமைச்சர் எ. வ. வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் படிக்க: கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி – நாளை வழங்குகிறார் முதல்வர் விஜய்

Follow Us