உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? கவலை வேண்டாம்.. மாற்றுவது எப்படி? ஆர்.பி.ஐ விளக்கம்
ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ள தகவலின்படி, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, புழக்கத்தில் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. 2026 ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி அது ரூ.5,451 கோடியாக குறைந்துள்ளது. மேலும், புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.47 சதவீதம் நோட்டுகள் ஏற்கனவே வங்கி அமைப்புக்குத் திரும்பியுள்ளதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
ஜூலை 9, 2026: புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் சட்டப்பூர்வமான செல்லுபடியாகும் நாணயமாகவே உள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் இஷ்யூ அலுவலகங்கள் மூலம் வங்கி கணக்கில் செலுத்தவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியும்.
2000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றலாம்?
ஆர்.பி.ஐ., தனது நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2023 மே 19ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இருப்பினும், அவை செல்லாதவை என அறிவிக்கப்படவில்லை. 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பணப்புழக்கத்தை சீரமைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள், பிற மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டன.
மேலும் படிக்க: கடும் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படுமா?
அனைத்து வங்கி கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், வங்கி கணக்கில் செலுத்தவும் 2023 அக்டோபர் 7ஆம் தேதி வரை வசதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சேவைகள் ரிசர்வ் வங்கியின் 19 இஷ்யூ அலுவலகங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், நாட்டின் எந்த தபால் நிலையத்திலிருந்தும் இந்திய அஞ்சல் சேவை மூலம் ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் இஷ்யூ அலுவலகங்களுக்கு அனுப்பி, அதன் மதிப்புத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்கும் வசதியும் உள்ளது.
98 சதவீத நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டது – ஆர்.பி.ஐ:
ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ள தகவலின்படி, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, புழக்கத்தில் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. 2026 ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி அது ரூ.5,451 கோடியாக குறைந்துள்ளது. மேலும், புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.47 சதவீதம் நோட்டுகள் ஏற்கனவே வங்கி அமைப்புக்குத் திரும்பியுள்ளதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களிடம் இன்னும் ரூ.2,000 நோட்டுகள் இருந்தால் அவற்றை ரிசர்வ் வங்கியின் இஷ்யூ அலுவலகங்கள் அல்லது இந்திய அஞ்சல் சேவை மூலம் வங்கி கணக்கில் செலுத்தவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியும் என்றும், ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமான செல்லுபடியாகும் நாணயமாகவே இருக்கும் என்றும் ஆர்.பி.ஐ. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.