வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா… 16 ஆண்டுகளைக் கடந்தது மதராசப்பட்டினம் படம்!
16 Years of madarasapattinam Movie | நடிகர்கள் ஆர்யா மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மதராசப்பட்டினம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 09-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மதராசபட்டினம். ஹிஸ்டாரிக்கள் ரொமாண்டிக் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் விஜய் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ஏமி ஜாக்ஷன் நாயகியாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் நாசர், கொச்சி ஹனீபா, அலெக்ஸ் ஓ’நெல், லிசா லாசரஸ், எம்.எஸ்.பாஸ்கர், பாலா சிங், உமர் லத்தீஃப், என்.எல். சீனிவாசன், சதீஷ், எம்.ஆர்.கிஷோர் குமார், இளங்கோ குமரவேல், பாலாஜி வேணுகோபால், லொள்ளு சபா ஜீவா, ஜாக் ஜேம்ஸ், ஜார்ஜ் மரியன், அப்புக்குட்டி,
சம்பத் ராம், லீமா பாபு, லவ்டே ஸ்மித், ஜெயக்குமார், அஜயன் பாலா, நிக்கோலஸ், கேரி டான்டோனி, மைக் பாரிஷ், மாத்தியூ பெல்லன், நீலு நஸ்ரீன் மற்றும் டி.எம்.கார்த்திக் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
16 ஆண்டுகளைக் கடந்தது மதராசப்பட்டினம் படம்:
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நடிகை ஏமி ஜாக்சன் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வருகிறார். ஆங்கிலேய ஆட்சி நடந்து கொண்டு இருந்த அந்த வேலையில் சலவை தொழிலாளியாக உள்ள ஆர்யா மீது காதல் ஏற்படுகிறது. இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து மீண்டும் சொந்த நாட்டிற்கு செல்கிறார். அப்போது இவர்களின் காதல் ஒன்று சேரவில்லை. பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏமி ஆர்யாவை தேடி வருகிறார். இந்த அழகான காதல் காவியம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனைப் படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
Also Read… தனுஷ் ரசிகர் மன்ற கொடி விவகாரம் – விளக்கம் அளித்த சுப்ரமணிய சிவா
மதராசப்பட்டின படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#16YearsOfMadrasapattinam ❤️#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi@arya_offl @iamAmyJackson#DirectorALVijay @gvprakash@Ags_production pic.twitter.com/ddAtFEQH0Y
— AGS Entertainment (@Ags_production) July 9, 2026
Also Read… விஜய் சேதுபதியின் ட்ரெய்ன் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ



