Vishnu Vishal: கட்டா குஸ்தி 2 வெற்றி.. விஷ்ணு விஷாலுக்கு பிக் கிஃப்ட் கொடுத்த தயாரிப்பாளர்!
Ishari K Ganesh gifted BMW Car To Vishnu Vishal: தமிழில் தொடர்ந்து தயாரிப்பாளராக சிறப்பான படங்களை கொடுத்துவருபவர் ஐசரி கே கணேஷ். இவரின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கட்டா குஸ்தி 2. இப்பட வெற்றியை முன்னிட்டு ஐசரி கே கணேஷ், விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசாக வழங்கியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) நடிப்பில் தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் புது புது படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியான முதல் திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இதை இயக்குநர் செல்லா அய்யாவு (Chella Ayyavu) இயக்க, பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். 2023ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியாக இந்த கட்ட குஸ்தி 2 படமானது வெளியாகியிருந்தது. இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi), மோக்ஷ, கருணாஸ் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவான படம், கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு வெளியான முதல் நாளிலிருந்தே சிறப்பான வரவேற்பு இருந்தது.
அந்த விதத்தில் சிறப்பான வசூலை பெற்று ஹிட் படமாக இது அமைந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பிரம்மாண்ட பரிசை கொடுத்துள்ளார். கட்டா குஸ்தி 2 பட வெற்றிவிழா சந்திப்பின்போது, நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, பல லட்சம் மதிப்புடைய BMW காரை அவர் பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: தள்ளி போகிறதா அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்
விஷ்ணு விஷாலுக்கு BMW காரை தயாரிப்பாளர் வழங்கியது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:
Producer IshariGanesh gifted a BMW car to VishnuVishal for the success of #GattaKusthi2 ♥️🔥pic.twitter.com/j9T2duXHCP
— AmuthaBharathi (@CinemaWithAB) July 9, 2026
திரையரங்குகளில் ஹிட்டடிக்கும் கட்டா குஸ்தி 2:
கட்டா குஸ்தி 2 படமானது தமிழகத்தில் ஒட்டுமொத்த பேமிலி ரசிகர்களை ஈர்த்துவருகிறது. இப்படம் கணவன் மனைவி, மற்றும் குழந்தை தொடர்பான காமெடி, எமோஷனல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்களிடையே ஸ்பெஷல் வரவேற்பு இருக்கிறது. வெளியாகியிருந்த 3வது நாளிலே இப்படம் உலகமெங்கும் சுமார் ரூ 22 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. விரைவில் ரூ 50 கோடியை தொட்டுவிடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இப்படிப்பட்ட உணர்ச்சிகள் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை – கண்ணீர்மல்க பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி!
இப்படத்தில் விஷ்ணு விஷாலும் தயாரிப்பாளாராக முதலீடு போட்டிருக்கும் நிலையில், அதில் ஷேராக அவர் அவரின் சம்பளத்தை பெறுவார் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் விஷ்ணு விஷாலுக்கு வெற்றிப்படமாக இந்த் கட்டா குஸ்தி 2 படமானது அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 5வது நாளிலே இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழு கொண்டாடியுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியின்போது விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் பல லட்சம் மதிலுப்பை BMW காரை பரிசாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.