AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெத்தி படத்திலிருந்து இன்று வெளியாகிறது ஹெல்லல்லல்லோ சிங்கிள் வீடியோ

Hellallallo Single Out Today : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரன். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பெத்தி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பெத்தி படத்திலிருந்து இன்று வெளியாகிறது ஹெல்லல்லல்லோ சிங்கிள் வீடியோ
பெத்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 23 May 2026 12:04 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படத்தில் இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே அவர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது இசையின் காரணமாக தமிழ் சினிமா மட்டும் இன்றி உலகம் முழுவதும் பிரபலமானவராக மாறினார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசை தான் வேண்டும் என்பதற்காக பல முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மொழியில் அதிக அளவில் இசையமைத்தாலும் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதன்படி தமிழ் சினிமாவில் இறுதியாக நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான காந்தி டாக்ஸ் என்ற படத்தில் சௌண்ட் ட்ராக் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் வசனம் எதுவும் பேசாமல் ஊமைப் படமாக உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

பெத்தி படத்திலிருந்து இன்று வெளியாகிறது ஹெல்லல்லல்லோ சிங்கிள்:

இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள படம் பெத்தி. இந்தப் படத்தில் நடிகர் ராம் சரன் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இந்தப் படத்தினை எழுதி இயக்கி உள்ளார். படம் வருகின்ற ஜூன் மாதம் 4-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இன்று படத்தில் இருந்து ஹெல்லல்லல்லோ பாடலின் சிங்கிள் வீடியோ வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… காஜல் அகர்வால் நடிப்பில் தி இந்தியா ஸ்டோரி படம் எப்போது ரிலீஸ் ஆகிறது? அப்டேட் இதோ

பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா – ஜோதிகா பசங்க எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க… இணையத்தில் வைரலாகும் கியூட் ஃபேமிலி வீடியோ

Follow Us