AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு

I Am Game Movie Release Update | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஐ அம் கேம். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்த நிலையில் தற்போது படம் எப்போது வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு
ஐ அம் கேம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 May 2026 12:42 PM IST

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது மகனாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் துல்கர் சல்மான். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகர் மம்முட்டியின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆன இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் துல்கர் சல்மான் ஒரு படத்தை தேர்வு செய்கிறார் என்றால் அந்தப் படம் நிச்சயமாக நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் விதைத்துள்ளார்.

அது மட்டும் இன்றி நடிகர் துல்கர் சல்மான் ஒரு படத்தில் நடிக்காமல் அதனை வேண்டாம் என்று சொன்னால் அது நிச்சயமாக நன்றாக இருக்கது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு இதுவரை அவர் ரிஜெக்ட் செய்த படங்கள் படு தோல்வியை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

துல்கரின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு:

இயக்குநர்  நஹாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ள படம் ஐ அம் கேம். இவரது இயக்கத்தில் முன்னதாக மலையாள சினிமாவில் வெளியான RDX படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தற்போது நடிகர் துல்கர் சல்மானை வைத்து ஐ அம் கேம் என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தில் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… மோகன்லாலின் லூசிஃபர் 3 கன்ஃபார்மா வரும்… தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Bhagyashri Borse: சேயோன் படத்திற்காக தமிழ் கற்றுவருகிறேன்.. தமிழில் தீவிரமாக இருக்கும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!

Follow Us