AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மலையாளத்தில் உருவான பாலன் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Balan The Boy Movie OTT Update Here | மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சிதம்பரம். இவரது இயக்கத்தில் உருவான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தற்போது இயக்கி உள்ள பாலன் தி பாய் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் உருவான பாலன் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
பாலன் தி பாய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 May 2026 15:02 PM IST

மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொதுவல். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மலையாள சினிமவில் வெளியான ஜான் இ மான் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே மலையாள சினிமாவில் பிரபலமான இவர் தொடர்ந்து இரண்டாவதாக இயக்கிய படத்தின் மூலம் பான் இந்திய அளவில் பிரபலம் ஆனார். அப்படி அவர் இரண்டாவதாக இயக்கிய படம் தான் மஞ்சுமல் பாய்ஸ். மலையாள சினிமாவில் வெளியாகி இந்தப் படம் பான் இந்திய ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் கேரளாவில் உள்ள மஞ்சுமல் என்ற இடத்தில் இருந்து கொடைக்கானல் சென்ற இளைஞர்களுக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தது.

காதலுக்காக உயிரையும் கொடுப்பார்கள் என்பதைத் தாண்டி நண்பனுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை இந்தப் படம் உணர்த்தி இருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் பாலன் தி பாய்.

பாலன் படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:

இந்த பாலன் தி பாய் படத்தை இயக்குநர் சிதம்பரம் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் சந்து சலீம்குமாரை மையமாக வைத்து கதை நகர்கிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் கேமியோ செய்துள்ள நிலையில் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் வருகின்ற ஜூன் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் ஜீ 5 மலையாளம் ஓடிடியில் வெளியாகும் என்றும் ஜீ 5 மலையாளம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Karuppu: வெறும் 8 நாட்களில்.. தமிழகத்தில் வசூல் சாதனை படைத்தது சூர்யாவின் கருப்பு திரைப்படம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அல்லு அர்ஜுன் படம் குறித்து இப்போது பேச முடியாது… ஆனால் – இயக்குநர் பேசில் ஜோசஃப் சொன்ன விசயம்

Follow Us